514மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

காய்களும்,   செறிந்த  -  நிறைந்த,  சாகை  -  கிளைகள், நிலை -
நிலையில்லாமல்,  தளர்ந்து  -  தாழ்ந்து,  ஒசிய - வளைய, காணா -
பார்த்து, அம் - அழகிய,  சிறைகள் - வண்டுகள், நிறைய - முழுதும்,
ஈண்டி - நெருங்கி,  மலர்  - புஷ்பங்களில், நிறைந்திருந்த - நிறைவு
பெற்றிருந்த,  மட்டை  -  மதுவை,  வாங்கினால்  -  நாம்  உண்டு
விடுவோமேயானால்,   தாங்கப்பாராம் -  கிளைகள்   தாங்குதலைப்
பார்க்கமாட்டோம், (என்று  எண்ணி)  இருந்து -  அப்பூக்களின் மீது
உட்கார்ந்து,  தேனை  -  மதுவை,  உண்ட  -  பருகின, எழுந்து -
கிளம்பி, (அக்கிளைகளும் பாரம் நீங்கி உயரக்கிளம்பி), இலாதவர்க்கு
- வறுமையினால்     பொருளில்லாமல்,    (தன்னிடத்தில்    வந்து
யாசித்தவர்களுக்கு),  இலை யெனா -  என்னிடத்தில்  ஒன்றுமில்லை
என்று கையைத் தூக்கிக்காட்டியதற் கொப்பாயிராநின்றது, எ-று. (41)

    இலாதவர்க்கு  +  இருந்து;  இலாதவர்க்கு  விருந்து  என வகர
உடம்படு மெய் பெற்றது.  "உயிர்வரின்  உக்குறள் மெய்விட்டோடும்"
என்னுஞ் சூத்திரத்தில் கெடும் என்னாது  ஓடும் என்றமையான், "இ ஈ
ஐ வழியவ்வும் ஏனை உயிர் வழிவவ்வும்  என்னுஞ் சூத்திரப்படி வகர
உடம்படு மெய்பெற்றதென்க. "வெண்ணிலா  மதியந்தன்னை விரிசடை
மேவவைத்து - வுண்ணிலாப் புகுந்து" என்றார் பிறரும்.

 1089. சிறப்பொடிங் கடைந்த தேவர் செறிபொழி லதனைச்
                                            சேர்ந்தாற்
      றுறக்கத்தை மறப்ப ரென்றாற் சொல்லுவ தினியென் னன்றிப்
      பிறப்பெறிந் திருந்த வீரன் பெருமையைச் சிறிது காட்ட
      விறப்பவு முயர்ந்த தேவ ராசனா லியன்ற தன்றோ.

   (இ-ள்.)   இங்கு  -  இவ்விடத்தில்   இந்த   ஸமவஸரணத்தில்,
சிறப்பொடு -  பூஜாத்திரவியங்களோடு  கூடி,  அடைந்த  - சேர்ந்த,
தேவர் - தேவர்கள், செறி - மரங்களால் நெருங்கிய, பொழிலதனை -
கற்பக விருட்ச  பூமியை,   சேர்ந்தால் - அடைந்தால், துறக்கத்தை -
தேவருலகத்தை, மறப்பர் -  மறந்து  விடுவார்கள், என்றால் - என்று
சொன்னால்,   இனி -   இன்னமும்,   சொல்லுவது  -  அப்பூமியை
வர்ணித்துரைப்பது, என் - யாது?,  அன்றி - அதுவல்லாமலும், பிறப்பு
- ஜனன மரணங்களை,  எறிந்திருந்த  -  கெடுத்திராநின்ற,  வீரன் -
அனந்த  வீரியனாகிய  ஜினேந்திரனுடைய,  பெருமையை மஹாத்மிய
குணத்தை,   சிறிது   -   கொஞ்சம்,   காட்ட  -   யாவர்களுக்கும்
காண்பிக்கும்படி,  இறப்பவும்  -  மிகவும்,  உயர்ந்த  -    மேலான,
தேவராசனால் - தேவேந்திரனால்,  இயன்றதன்றோ - (இது) நிருமிதம்
செய்யப்பட்டதல்லவோ, எ-று. (42)

 1090. பளிக்குநற் றலமி தென்று வாவியுட் பாதம் வைத்துக்
      குளிக்கவீழ்ந் தவரைக் காணாக் கைகொட்டிச் சிரிப்பர்
                                                நோக்கா