பளிக்கறைத் தலத்தை வெள்ளப்
பரப்பென்று பார்த்து மீள்வா
ரொளிப்பிழம் பிவற்றைப் பித்தி யென்றுபோக்
கற்று நிற்பார்.
(இ-ள்.)
(இன்னும் அங்கே), பளிக்குநற்றலமிதென்று -
இவ்விடம்ஸ்படி கரத்தினத்தினாலாகிய
பூமியென்று, நோக்கா -
பார்த்து, வாவியுள் - தடாகத்தினுள், பாதம் - கால்களை, வைத்து -
இட்டு, குளிக்க - சரீராதிகள்
நனைய, வீழ்ந்த வரை -
வீழ்ந்தவர்களை, காணா -
(அருகிலிருப்பவர்கள்) பார்த்து,
கைகொட்டி - கையைத் தட்டிக்கொண்டு, சிரிப்பர்
- சிரிப்பார்கள்,
(இன்னும் சிலர்), பளிக்கறைத் தலத்தை -
ஸ்படிகத்தினாலாகிய
பூமியை, வெள்ளப் பரப்பென்று - ஜலபூரிதமாகிய
தடாகமென்று,
பார்த்து - நோக்கி, மீள்வார் - அதிற்செல்லாமல்
திரும்புவார்கள்,
ஒளிப்பிழம்பிவற்றை - ஒளியின் சமூகத்திரட்சி
முதலிய இவற்றினை
பித்தியென்று - கண்ணாடிச் சுவரென்று,
போக்கற்று - அங்க
செல்கையற்று, நிற்பார் - நிற்பார்கள், எ-று. (43)
1091. கதிர்மணி மாடந் தம்மைக் கண்ணுறு வார்தஞ் சாயை
யெதிர்வரு வாரை யொப்ப விடைந்திடைந் தெங்கு நிற்பர்
மதுரமாந் தஞ்சொற் றாமே தமக்கெதிர் மாற்ற மாக
வெதிரெதிர் மொழிகின் றாரொத் தியம்புவ ரெங்கு மெங்கும்,
(இ-ள்.) கதிர்
- கிரணத்தையுடைய, மணி
- ஸ்படிக
மணிகளாலாகிய மாடந்தம்மை - உப்பரிகைகளை, கண்ணுறுவார் -
பார்க்கின்றவர்கள், தம் - தங்களுடைய, சாயை - பிரதிச்சாயலாகியது,
எதிர் வருவாரை - எதிர்வரப்பட்டவர்களுக்கு,
ஒப்ப - சமானமாக,
(அவர்கள்), எங்கும் - எவ்விடங்களிலும், இடைந்திடைந்து -
ஒதுங்கி
யொதுங்கி, நிற்பார் - நிற்பார்கள், எங்குமெங்கும் - எவ்விடங்களிலும்,
மதுரமாம் - மாதுரியமாகிய, தஞ்சொல் - தங்களுடைய
வசனங்கள்,
தாமே - தாமே, தமக்கு -
தங்களுக்கு, எதிர்மாற்றமாக -
பிரதிசப்தமாக, எதிர் எதிர் எதிரெதிராக, மொழிகின்றாரொத்து -
சொல்பவர்களையொத்து, இயம்புவர் - பேசுவார்கள், எ-று. (44) வேறு.
1092. வரைபுரையு மாளிகையி னிரைகளவை யொருபால்
பருதியொளி தெறுவபல மண்டபங்க ளொருபால்
மருவினரு மறிவரிய மாடநிரை யொருபால்
பருமணிய தூணிரைய பாடலிட மொருபால்.
(இ-ள்.) (அந்தக்
கற்பகவிருட்ச பூமியில்), வரை புரையும் -
பர்வதத்திற்குச் சமானமாகிய
(அதாவது : பர்வதம்போல்
உன்னதமாகிய), மாளிகையின் - உப்
|