பரிகைகளினுடைய, நிரைகளவை -
வரிசைகளானவை, ஒருபால் -
ஒரு பக்கத்திலாகும், ஒருபால் - மற்றும் ஒரு பக்கத்தில், பருதியொளி
- சூர்யகிரணத்தை, தெறுவ - ஜெயித்த ஜோதியையுடைய, பல -
அனேகங்களாகிய, மண்டபங்கள் - மண்டப
ஸமூகங்களாகும்,
ஒருபால் - மற்றுமொரு பக்கத்தில்,
மருவினரும் - அதனுள்
சேர்ந்தவர்களும், அறிவரிய - இதன்
தன்மையிப்பெற்றியதென்று
அறிதற்கரிதாகிய, மாடநிரை - மாடங்களினுடைய
வரிசைகளாகும்,
பரும் - பருத்த, மணிய - இரத்தினத்தினாலாகிய.
தூணிரைய -
ஸ்தம்ப ஸமூகங்களையுடைய, பாடலிடம் -
ஸங்கீதங்களைப்
பாடும்படியான இடங்கள், ஒருபால் - ஒரு பக்கத்திலாம், எ-று. (45)
1093. நாடக மடந்தையர்க ளாடுமிட மொருபால்
ஆடவர்கள் கூடிவிளை யாடுமிட மொருபால்
கோடுயர்செய் குன்றமவை நின்றவிட மொருபா
லாடகநல் வேதிகைய கூடமிட மொருபால்.
(இ-ள்.)
நாடக மடந்தையர்கள் - நர்த்தன மாதர்கள், ஆடும் -
நர்த்தனஞ் செய்கின்ற, இடம் - நர்த்தன சாலைகள், ஒருபால் - ஒரு
பக்கத்திலே யிராநின்றன, ஆடவர்கள் - புருஷர்கள், கூடி - சேர்ந்து,
விளையாடுமிடம் - விளையாடுகின்ற இடமானது,
ஒருபால் - ஒரு
பக்கத்திலாகும், கோடுயர் -
சிகரங்களினால் உயர்ந்திராநின்ற,
செய்குன்றமவை - கிரீடாத்திரி பர்வதங்கள், நின்ற
- இராநின்ற,
இடம் - இடமானது, ஒருபால் ஒரு பக்கத்திலேயாகும், ஆடகம் -
பொன்னாலாகிய, நல் -
நன்மையாகிய, வேதிகைய -
சுவர்களையுடைய, கூடமிடம் - கூடங்களானவை,
ஒருபால் - ஒரு
பக்கத்திலே யிராநின்றன, எ-று. (46)
1094. வான்கரும்பின் றீஞ்சுவைய வாரிநதி யொருபால்
தேன்செறிந்த பூந்தடங்கள் சிறைபயின்ற தொருபால்
வாய்ந்தமணித் தலங்கள்வல்லி மண்டபங்க ளொருபால்
சூழ்ந்தசெம்பொன் வேதிகைய வாகுஞ்சில வொருபால்.
(இ-ள்.) ஒருபால் -
மற்றும் அக்கல்பக விருட்ச பூமியில் ஒரு
பக்கத்தில், வான் - அழகிய, கரும்பின் - கரும்பினுடைய, தீம் -
தித்திப்பாகிய, சுவைய -
சுவையையுடையனவாகிய, வாரி -
ஜலங்களையுடைய, நதி - ஆறுகளாகும். ஒரு
பால் - மற்றொரு
பக்கத்தில், தேன் - மதுக்கள், செறிந்த -
சேர்ந்திராநின்ற, பூம் -
புஷ்பங்களையுடைய, தடங்கள் - தடாகங்க்ள்,
சிறை பயின்றது -
தங்குதல் கொண்டிராநின்ற தன்மையாகும், வாய்ந்த - அழகு வாய்ந்த,
மணித்தலங்கள் - ரத்தினத்தினாலாகிய
தளங்களும்,
வல்லிமண்டபங்கள் - லதாமண்டபங்களும்,
ஒரு பால் - ஒரு
பக்கத்தில் உள்ளனவாம், ஒருபால் - ஒருபக்கத்தில், சில - சில
|