தொக்கநல காயமன வசிவலிக ளொருபால்
பக்கமுத னோன்புடைய பரமதவ ரொருபால்.
(இ-ள்.)
உக்கதவர் - உக்கிர
தபஸையுடையவர்களும்,
தித்ததவர் - தீப்த தபமுடையவர்களும், தத்ததவர்
- தப்த
தபஸ்வியர்களும், ஒருபால் - ஒரு பக்கத்திலிருப்பார்கள், மிக்கதவர் -
மஹா தபஸையுடையவர்களும்,
கோரதவர் - கோர
தபஸையுடையவர்களும், (ஆகிய தபோரித்தியை
யுடையவர்கள்),
மேவும் இடம் - பொருந்துமிடம்,
ஒருபால் - ஒரு
பக்கத்திலேயிருக்கும், நல - நன்மையாக, தொக்க -
சேர்ந்திரா நின்ற,
காய மன வசிவலிகள் - காயபெலிகளும் மனோபெலிகளும் வசன
பெலிகளுமாகிய பெலரித்தி பெற்ற முனிவர்கள்,
ஒருபால் - ஒரு
பக்கத்திலேயிருப்பார்கள், பக்க
முதல் - பக்ஷோபவாஸம்
மாஸோபவாஸாதி விரதங்களையுடைய, பரம -
மேலான, தவர் -
தபத்தையுடையவர்கள், ஒருபால் - ஒரு பக்கத்திலேயிருப்பார்கள்,
எ-று. (50)
1098. மாசுமலம் வாய்த்திவலை மூக்குடைய மருந்தாம்
பேசரிய பெருந்தவர்க ளிருந்தவிட மொருபால்
வாசநறு நெய்யமுது பாலமுது வின்மே
லாசையற வுரைசெய்மொழி யருந்தவர்க ளொருபால்.
(இ-ள்.) கதிர்
- கிரணத்தையுடைய, மாசுமலம் -
(தங்களுடைய) சரீரத்தின்மேலாகிய
அழுக்குத் தூளிகளும்,
வாய்த்திவலை - வாயிலுண்டாகிய
நீர்த்துளியும், மூக்குடைய -
மூக்கிலுண்டாகும் சளிப்பும், (ஆகிய
இவைகள்), மருந்தாம் -
பிறர்களின் வியாதிகளுக்கு மருந்தாகின்ற, பேசரிய - சொல்லுதற்கரிய,
பெரும் - பெருமையையுடைய ஒளஷதரித்திகளை யடைந்திராநின்ற,
தவர்கள் - (ஆமௌஷதிப்
பிராப்தர் கேளௌஷதிபிராப்தர்,
ஜல்லௌஷதி பிராப்தர், விப்ரௌஷதி
பிராப்தர், ஸர் வௌஷத
பிராப்தர் ஆகிய) தபஸிகள், இருந்த - தங்கி யிராநின்ற, இடம் -
இடமானது, ஒரு பால் - ஒரு பக்கத்திலாகும்,
வாசம் நறும் -
நறுமணம் பொருந்திய, நெய்யமுது - நெய்யன்னம்,
பாலமுதுவின்மேல்
- பாலன்னம் ஆகிய இவற்றின்மேல், ஆசையற - ஆசை நீங்கும்படி,
உரைசெய் - சொல்லப்பட்ட, மொழி - தர்ம வசனத்தையுடைய, அரும்
- அரிதாகிய, தவர் - (க்ஷீரஸவீணம் முதலாகிய ரஸரித்தியையுடைய)
தபஸிகள், ஒருபால் - ஒரு பக்கத்திலே யிருப்பார்கள், எ-று. (51) 1099.
முதலிறுதி நடுவணொரு பதமதுகொண் டந்நூல்
விதிமுழுது மறிஞர்சிலர் மூலபத மேவி
முதனடுவு முடியவுணர் வார்சம்பின்ன
மதிகண்
மதியின்புகை பன்னிரண்டின் வருமொழிக ளறிவார்.
|