அரசன் நகருக்குத் திரும்புதல்.
108. எழுதரு பருதி முன்ன ரிறைஞ்சிய கமலம் போலத்
தொழுதெதிர் முழுதுங் கேட்டுப் போய்நகர்த் துன்னிச் சுற்ற
முழுதையு மழைத்து முத்திக் கரசனாய் முயல்வ னென்று
பழுதிலாப் புதல்வன் றன்மேற் பாரைவைத் தினைய சொன்னான்.
(இ-ள்.) எழுதரு - உதயமாகிய, பருதிமுன்னர் -
சூரியனுக்கெதிரிலே, இறைஞ்சிய - மலர்ந்து வணங்கிய, கமலம்போல
- தாமரைப்பூப் போல, எதிர் - ஸ்வயம்பு நாமதீர்த்தங்கரருக்கெதிரில்,
தொழுது - (வைஜயந்த மகாராஜன்) வணங்கி, முழுதும் -
ஜீவாதிபதார்த்தங்கள் முழுதும், கேட்டு - அவர் சொல்லக்கேட்டு,
போய் - அங்கு நின்றுபோகி, நகர் - நகரத்தில், துன்னி - (தனது
அரண்மனையைச் ) சேர்ந்து, சுற்றமுழுதையும் -
பந்துக்களனைவரையும், அழைத்து - (சமீபத்தில்) வரவழைத்து,
முத்திக்கு - மோக்ஷத்திற்கு, அரசனாய் - எஜமானாக, முயல்வன் -
(இனிதபத்தில்) முயற்சி செய்வேன், என்று - என்று தெரிவித்து,
பழுதிலா - குற்றமில்லாத, புதல்வன்றன்மேல் - ஜேஷ்டபுத்திரனாகிய
சஞ்சயந்தன்மேல், பாரை - இந்த பூமி ராஜ்யத்தை, வைத்து -
ஸ்தாபித்து, இனைய - இத்தன்மையானவைகளை (பின் பாடல்களில்
வரும் விஷயங்களை),சொன்னான் - அந்தக் குமாரனுக்குக் கூறினான்,
எ-று. (108)
109. இளமையு மெழிலும் வானத் திடுவிலி னீண்ட மாயும்
வளமையுங் கிளையும் வாரிப் புதியதன் வரவு போலும்
வெளியிடை விளக்கின் வீயு மாயுவு மென்று வீட்டுக்
குளபக லூக்கஞ்
செய்வா ருணர்வினாற் பெரிய நீரார்.
(இ-ள்.) உணர்வினால் - ஞானத்தினால், பெரியநீரார் -
பெரியதாகிய குணவந்தர்கள், இளமையும் - பால்யமும், எழிலும் -
அழகும், வானத்து - ஆகாயத்தில், இடு - இடப்பட்ட, நீண்ட -
நீட்சியாகிய, வில்லின் - இந்திர தனுஸைப்போல, மாயும் -
நிலையின்றிக்கெடும், வளமையும் - வளப்பமாகிய செல்வமும்,
கிளையும் - பந்துத் தன்மையும், வாரிப்புதியதன் வரவு போலும் -
மழையினால் வரப்பட்ட புது வெள்ளத்துக்கு ஒப்பாகும், ஆயுவும்-
ஆயுஷ்யமும், வெளியிடை - (காற்றின் மறைவில்லாத) வெளியிலே
வைக்கப்பட்ட, விளக்கின் - தீபத்தைப்போல், மாயும் -
மாய்ந்துபோகும், என்று - (இவ்வாறு ஸம்ஸார ஸ்வரூபம் அனித்தியம்)
என்று நினைத்து, உளபகல் - தங்களுக்குண்டாகிய ஆயுஷ்ய
நாளுக்குள்ளே, வீட்டு - மோட்சத்திற்கு, ஊக்கம் செய்வார் -
(ஸர்வசங்க பரித்தியாகமாகிற தபசைக்கொண்டு சுத்தோபயோகத்திற்கு)
முயற்சி செய்வார்கள், எ-று.
(109)
|