களும், கேட்பவர் -
பேஸ்ரீதாக்களும், நிருக்தர் - பதம்
பிரித்துத்
தெளிய வியக்தி சொல்லுகின்ற
வியாக்கியன கர்த்தாக்களும்,
வாதியர்கள் - தர்க்க சாஸ்திரம் படித்து
யூகித்துத் தத்துவ நிச்சயஞ்
செய்பவர்களும், கற்ற - தாம் கற்ற ஆக மாத்தியயனத்தை, மறவாத -
மறுபடி மறந்து போகாத, மதியோர்கள் - தாரணா
மதிஜ்ஞான வீரிய
வந்தர்களும், மேதகைய - மேன்மை பொருந்திய,
சிந்தனைகள் -
தருமத்தியான சுக்கிலத் தியானங்களை,
மேவுநர்கள் - பொருந்தி
பாவிக்கின்ற ஏகாக்கிரசித்த தபஸ்வியர்களும்,
ஒரு பால் - ஒரு
பக்கத்திலிருப்பார்கள், எ-று. (54)
1102. புக்கவிடஞ் சக்கரன்றன் படையொதுங்கப் போது
மிக்கதவர் பாணிமிசை மேயமிகை யடிசில்
புக்குலக முண்டிடினும் போதுபக லெல்லைத்
தக்கதவர் முதன்முனிவர் சாற்றமுடி யாரே.
(இ-ள்.)
(இன்னும் அங்கே), புக்கவிடம் - தாம்
அடைந்திரா
நின்ற இடமானது, (அளவினால் அற்ப
விஸ்தீர்ணமாயிருந்தும்),
சக்கரன் தன் - மஹா சக்ரவர்த்தியினுடைய,
படை - த்வாதச
யோஜனை விஸ்தீர்ணமாகிய பெரும்படைகள், (வந்துற்றாலும்),
ஒதுங்க
- தங்குவதற்கு, போதும் - குறைவில்லாமல்
போதும் படியான,
(அக்ஷீண மஹாலயத்துவமென்கின்ற ரித்தியையுடைய),
மிக்க -
மிகுதியாகிய, தவர் - தபஸையுடைய முனிபேஸ்ரீஷ்டர்களும்,
பாணி
மிசை - (பிக்ஷா போஜியாகச் சரியா மார்க்கம்
வந்த காலத்தில் பத்ர
சீலர்கள் எதிர்கொண்டழைத்து சப்த
குணங்களுடன் நவபுண்ணிய
விதிக்கிரமத்தால் உதவ) தமது கையில், மேய - பொருந்திய, மிகை
அடிசில் - மிகுந்த அன்னமானது, (அதாவது : தாம்
உண்டதுபோக
மிகுந்திருந்த ஆகாரமானது),
உலகம் -
இந்த
உலகத்துள்ளோரெல்லாரும், புக்கு -
அடைந்து, உண்டிடினும் -
பொஜித்தாலும், பகலெல்லை - அன்று
பகற்பொழுதுவரையில்,
போதும் - குறைவடையாமல்போதும் படியான, தக்க - தகுதியாகிய,
தவர் முதல் -(அக்ஷீண மஹா அசனத்துவமென்கின்றரித்தியையுடைய)
தவசிரேஷ்டர்கள் முதலாகிய, முனிவர் - முனிவர்கள், சாற்ற முடியார்
- சொல்ல முடியாத தன்மையாக ஸம்மியக தரிசனஞான சாரித்திர
குணவிர்த்தியையுடையவர்களாக இருப்பார்கள், எ-று. (55)
1103. இனையமுனி வனமிதனின்
வீதியிரு மருங்கிற்
கனகமணி வேதிகைவில் லுடையகொடி
யதனின்
னினையமலி நிலங்களையவ் வேந்தர்பணிந்
தேத்தி
யனகமன ராயிறைஞ்சி யாசிர மடைந்தார்.
(இ-ள்.) வீதி - ஆறாம் பிராகார சதுர்
மஹா வீதிகளினுடைய,
இருமருஞ்கில் - இரண்டு பக்கங்களிலுமாகிய, வனமிதனின் -
இந்தக்
கற்பக விருட்சாவனி
|