செய்யக்கண்ட), வான் - பெரிதாகிய, கடல் - ஸமுத்திரத்தினது, ஓதம்
- ஜலமானது, ஏற - அதிகரித்து
வெளியாகி வர, உடன் -
அதனுடனே, புகும் - எதிர்த்து அதனுள்ளடைகின்ற, ஆறுபோல் -
ஆற்று ஜலங்களைப் போல், நாதன் -
ஸ்வாமியினுடைய, மா -
பெருமை பொருந்திய, நகர் - சமவஸரணத்தினது, முன்றிலின் -
எதிர்
முற்றத்தில், (இராநின்ற இந்த ஜயாசிரய மண்டபத்தின்), வாய்தல் வாய்
- வாசற்படி வழியில், போதுவார் - உள்ளிருந்து
வருபவர்களும்,
புகுவார்கள் - வெளியினின்று போகின்றவர்களும்,
மிடைந்து -
நெருங்கி, அறார் - பற்றறாதவர்களாவார்கள், எ-று. (58)
1106. சுந்த ரத்தர ளம்பவ ழத்திரள்
பந்தி பந்தி பரந்தன பார்மிசை
யிந்து வின்கதி ரோடிர விக்கதிர்
வந்து வாலுக மாயின போலுமே.
(இ-ள்.)
(அங்கே), சுந்தரம் - அழகிய,
தரளம் - முத்து
மணிகளும், பவழத்திரள் - பவழ ஸமூகங்களும்,
பந்தி பந்தி -
தனித்தனி வரிசை வரிசைப் பட்டைகளாக,
பார்மிசை - பூமியின்
மேல், பரந்தன - விசாலித்திரா
நின்றன, (அத்தோற்றத்தைப்
பார்த்தால்), இந்துவின் கதிரோடு - சந்திர கிரணத்துடன்,
இரவிக்கதிர்
- சூர்ய கிரணமும், வந்து - இவ்விடம்
வந்து, வாலுகமாயின -
மணலாயினதை, போலும் - நிகர்க்கும், எ-று. (59)
1107. மரைத்த லத்தரை சோதிட
மண்டிலம்
வரைத்த குங்குமஞ் சந்தன மண்டிலம்
நிரைத்த செங்கம லங்க ணிலமிசைத்
தரைத்த லத்தெழு தாமரை போலுமே.
(இ-ள்.) (பின்னையும்
அந்த ஜெயாஸ்ரீயமண்டபத்தில் மேல்
பரப்பின் உள்ள பாகத்தில்), குங்குமம்
- குங்குமக் குழம்பாலும்,
சந்தனம் - சந்தனக்
குழம்பாலும், வரைத்த -
அளவு
செய்தெழுதப்பட்ட, மண்டிலம் -
சூரிய சந்திர வட்டங்கள்,
மரைத்தலத்தரை - புஷ்கரவரத்வீபத்தின் பாஹ்யார்த்த பாகத்திலுள்ள,
சோதிட மண்டிலம் - ஜோதிஷ்க தேவர்களாகிய
சூர்ய சந்திர
மண்டலங்கள் செல்கையில்லாமல்
ஸ்திரமாக நிற்பது போல
விளங்கும், (இன்னும்), நிலமிசை -
பூமியில் அல்லது அடியில்,
செங்கமலங்கள் - செந்தாமரைப் பூக்கள்,
நிரைத்த - வரிசையாக
எழுதப்பெற்றனவாம், (அத்தோற்றத்தைப் பார்த்தால்), தரைத்தலத்து -
அப்புஷ்கரார்த்த த்வீபத்தினுடைய பூமியில்,
எழும் - உண்டாகிய,
தாமரைப் போலும் தாமரைப் புஷ்பத்தினை நிகர்க்கும், எ-று. (60)
|