526மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

ஜீவன்களுக்கு,    ஆர்வமின்றி  -   தனக்கொரு  வாஞ்சையுமின்றி,
அறத்தை     -     தர்ம      ஸ்வரூபத்தை,       அளிக்கும் -
உபதேசிக்கின்றவனாயினான், எ-று. (68)

 1116. மேரு வின்றிசை யெட்டையு மேவிய
     வார ணம்மலை போல்வன மண்டப
     மேர ணிந்துள வெண்டிசை யுமிதன்
     நேர்முன் னின்றதோர் பீடிகை நன்றரோ.

   (இ-ள்.)  இதன் - இந்த மஹோதய மண்டபத்தின், எண்டிசையும்
- எட்டுத்   திக்குகளிலும்,   மேருவின்  -  மஹம்மேருபர்வதத்தின்,
திசையெட்டையும் - எட்டுத் திக்குகளையும், மேவிய - பொருந்தியிரா
நின்ற,   வாரணம்   மலைபோல்வன   -   திக்கஜ   பர்வதங்களை
நிகர்ப்பனவாகிய,  மண்டபம்  -  மண்டபங்களானவை,  ஏரணிந்து -
மிகவும்   அழகைப்பெற்று,  உள -  உள்ளன,  நேர்முன்  -  (இந்த
மண்டபங்களையெல்லாந் தாண்டி  வீதியில்) நேராக முன்னே, நன்று
- நன்மையானதாகிய,  ஓர்பீடிகை  - ஒரு பலி பீடமானது, நின்றது -
நிலைபெற்றுளது, எ-று. அரோ - ஈற்றசை. (69)

 1117. வல்லி நன்மணி பொன்மய மாகிய
     வெல்லி யும்பக லும்பலி யேந்துமி
     தெல்லை செய்திறை வன்னகர் வாயிலுட்
     செல்ல வல்லிகண் மண்டப மீண்டுமே.

   (இ-ள்.)   வல்லி   -  யோக்கியப்   பிரமாணோத்ஸேத  அகல
நீளங்களையுடையதாகி,   நல்   -   நன்மையாகிய,   மணிமயம்  -
இரத்தினங்களின்  சொரூபமும்,  பொன்  மயம் -   ஸ்வர்ணங்களின்
சொரூபமும், ஆகிய  -  ஆன (அதாவது  :  இவைகளை இழைத்துச்
செய்திராநின்ற), இது -  இப்பீடமானது,  எல்லியும்  பகலும் - இரவும்
பகலும்,  பலியேந்தும் -  பலிபிண்டங்களை  பூஜகர்களால்  தரிக்கும்,
எல்லை     செய்து -     இதனை    அளவிட்டு,     (அதாவது :
இஃதிவ்வளவினதென்று    ஆராய்ந்துகொண்டு),   இறைவன் நகர் -
ஜினேந்திரனுடைய   ஆலயத்தின்,   வாயிலுள்   - வாயிலுக்குள்ளே,
செல்ல - போக, (அவ்விடத்தில்), வல்லிகள் - பூங்கொடிகளையுடைய,
மண்டபம் - லதாமண்டபங்கள் (அதாவது : புஷ்பபந்தல்கள்), ஈண்டும்
- நெருங்கியிருக்கும், எ-று.

         மயம் - இரண்டிடங்களிலுங் கூட்டப்பட்டது. (70)

 1118. போத றாமணிப் பீடத்தி னப்புறம்
     வாய்தல் வீதியை நோக்கிய மண்டப