532மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

மூதுறை - உயர்ந்த இருப்பிடமாக, மேவிய - பொருந்திய,  இதனை -
இந்த ஸ்ரீநிலயத்தை,   யான் -  நான்,  விளம்பலுற்றது  -  வர்ணிக்க
உத்தேசித்தது, நாவலர் -  வித்வான்கள்,  நகுவது - சிரிப்பதற்கு, ஓர்
வாயிலாகும், எ-று. (82)

 1130. இவ்விட மிவ்வண்ண மாகி னன்றெனி
      லவ்விட மவ்வண மாகித் தோன்றிடு
      மிவ்விடத் திவ்விட மழகி தென்றிடி
      னவ்விடத் தவ்விட மழகி தாகுமே.

   (இ-ள்.)   (அங்கே),    இவ்விடம்  -    இந்த     இடமானது,
இவ்வண்ணமாகில் -  இந்த  விதமானால், நன்று - நல்லது, எனில் -
என்று நினைத்தால், அவ்விடம் - அந்த இடமானது, அவ்வணமாகி -
அதே   பிரகாரமாகி,   தோன்றிடும் -   தோன்றும்,  இவ்விடத்து -
இவ்விடத்தைக்காட்டிலும்,  இவ்விடம் -  இந்த இடமானது, அழகிது -
அழகையுடையதாகும், என்றிடில் -  என்று நினைத்தால், அவ்விடத்து
- அவ்விடத்தைக்காட்டிலும்,   அவ்விடம்   -   அந்த    நினைத்த
இடமானது, அழகிதாம் - அழகையுடையதாகும், எ-று. (83

 1131. உச்சமே நீசமாய நீச முச்சமா
     யிச்சையா லொருவனுக் கியலு மாறுபோ
     லுச்சமே நீசமாய் நீச முச்சமா
     யிச்சையின் படியினா லெங்குந் தோன்றுமே.

   (இ-ள்.)     உச்சமே -  மேலான    தன்மையே,     நீசமாய் -
தாழ்ந்ததன்மையாய், நீசம் -  தாழ்வான  நிலைமையே,   உச்சமாய் -
உயர்ந்த நிலைமையாகி,   இச்சையால் - ஆசையினால், ஒருவனுக்கு -
ஒரு புருஷனுக்கு,   இயலுமாறுபோல்  -  அவன்  உள்ளத்தின்  படி
இசைவதுபோல், (இச்சமவசரணத்திலும்),  உச்சமே - உயர்ந்தவைகளே,
நீசமாய்   -    தாழ்ந்தவைகளாகவும்,    நீசம்  -   தாழ்ந்தலக்ஷண
முள்ளவைகள்,  உச்சமாய்  -  மேலான லக்ஷணமுள்ளவைகளாகவும்,
இச்சையின்படியினால்    -     அவரவர்களின்       அபிப்பிராய
கருத்துக்கிசைந்த விதமாகி, எங்கும் - எவ்விடங்களிலும், தோன்றும் -
விளக்கமுடையனவாகும், எ-று. (84)

     இவ்விரண்டு    பாடல்களாலும்    இவ்விடம்      பிரமிக்கும்
தன்மையையுமுடையதென்பது பெறப்படும்.

 1132. ஒசனை மூன்றரை யகன்ற தோங்கிய
     தோசனை நான்குமேற் கோச மைந்துகீழ்
     மாசிலாப் பொன்மணி பத்தீ ரெட்டினா
     லாசைபோற் பரந்தவில் லவய வத்ததாம்.