டகம் - கோட்டகங்களுமாம்,
நீர்மையால் - வரிசையினால்,
(அவைகளில்), தனுமுப்பது - கூடங்கள் முப்பதுவில்லும், இரட்டி -
கோட்டகங்கள் அறுபது வில்லும், நீண்ட - நீண்டனவாம், எ-று. (87)
1135. தலமி ரண்டிவற் றின்வாய்தல் காவலா
நிலையமந் தராளத்து நின்ற வெங்கணுந்
தலையெழு நூறுமுற் சகதி யின்முறை
நிலையிரண் டெழுபது நாற்பத் தெட்டுமாம்,
(இ-ள்.)
இவற்றின் - இந்த ஜகதீதலத்தின்
மண்டபங்களின்
மேலே யிராநின்ற, தலமிரண்டு,
கூட கோட்டகமாகிய
ஸ்தலங்களிரண்டும், நிலையம் - நிலைகளோடும்,
அந்தராளத்து -
அந்தராளங்களோடும், எங்கணும் - எவ்விடங்களிலும்,
வாய்தல்
காவலா - வாசற் றுவார காவற்காரார்களைப்போல,
நின்ற - நின்றன,
முற்சகதியில் - முதல் ஜகதிமண்டபத்தில்,
(மேலிருக்கப்பட்ட
கூடங்கள்), தலை - முதலிலே, எழுநூறு - எழுநூறோடே கூட, நிலை
- நிலைத்த, இரண்டோடு - இரண்டுடன்,
எழுபது - எழுபதும்
(அதாவது : எழுநூற்றெழுபத்திரண்டும்), முறை - (அதற்குமேல்)
கிரம
வரிசையால், நாற்பது - (இரண்டாவது
ஜகதிமண்டபத்தின்மேல்)
நாற்பதும், (அதாவது : எழுநூற்று நாற்பதும்),
எட்டும் - (மூன்றாஞ்
சகதி மண்டபத்தின்மேல்) எட்டும், (அதாவது :
எழுநூற்றெட்டும்),
ஆம் - ஆகும், எ-று. (88) 1136. கூடத்தி னெண்ணவே கோட்ட கங்கொடி
பீடத்தி னெழுபத்தே ழாயி ரங்களி
னூடுற்ற மூன்றுநூற் றெண்பத் தொன்றுமாய்
நீடுற்ற முதலாஞ் சகதி நின்றவே.
(இ-ள்.) (மேற்கூறிய), கூடத்தின் - கூடங்களுடைய,
எண்ணவே
- கணக்கையுடையனவே, கோட்டகம் - கோட்டகங்கள், நீடுற்ற -
பெரிதாகிய, முதலதாஞ்சகதி -
முதற்சகதி மண்டபத்தின்
விளிம்புகளில், பீடத்தின்
- பீடங்களில் (ஸ்தாபிதமாகிச்
சூழ்ந்திராநின்ற), கொடி -
வரண்டகக் கொடிகளானவை,
எழுபத்தேழாயிரங்களின் - எழுபத்தேழாயிரங்களோடு, ஊடுற்ற -
ஊடே சேர்ந்த, மூன்று நூற்றெண்பத்தொன்றுமாய் - முந்நூற்றெண்பத்
தொன்றாகி, நின்ற நின்றன, எ-று. (89) 1137.
எழுபத்து நான்கையா யிரத்து மாறிய
குழுவுற்ற விரண்டுநூற் றெழுபத்
தொன்பது
மெழுபத்தோ ராயிரத் தைம்பத்
தாறுமாம்
பழுதற்ற சகதிமேல் மேற்ப தாகையே.
|