சமவசரணச்சருக்கம்535


Meru Mandirapuranam
 

   (இ-ள்.) பதாகை - வரண்டகத்துவஜங்கள், பழுதற்ற -  குற்றமற்ற,
சகதிமேல் - இரண்டாஞ் சகதி மண்டபத்து மேல், எழுபத்து நான்கை
- எழுபத்து நாலை, ஆயிரத்து  மாறிய - ஆயிரத்தினால் பெருக்கிய,
குழு - கூட்டத்தில், (அதாவது :  எழுபத்து  நாலாயிரத்தில்), உற்ற -
பொருந்திய,          இரண்டு         நூற்றெழுபத்தொன்பது   -
இருநூற்றெழுபத்தொன்பதும்,   மேல் - மூன்றாஞ்சகதி மண்டபத்தின்
மேல்,  எழுபத்தோராயிரத்  தைம்பத்தாறும்  -   எழுபத்தோராயிரத்
தைம்பத்தாறும், ஆம் - ஆகும், எ-று. (90)

 1138. இரண்டுநூற் றெழுபத்தே ழாயி ரத்தொடு
     திரண்டதொள் ளாயிரத் திருப தாமுதற்
     கிரண்டுநூற் றறுபத்தா றாயி ரத்தொடு
     நிரந்தநா னூறுகண் ணடுவு நின்றவே.

   (இ-ள்.)   முதற்கு  -  முதல்  சகதிமண்டபத்திற்கு,   (மேலுள்ள
கூடங்களில் கொடிகளானவை), இரண்டு நூற்றெழுபத்தேழாயிரத்தொடு
-  இரண்டு    லக்ஷத்து   எழுபத்தேழாயிரத்தோடு,      திரண்ட -
சேர்க்கப்பட்ட,   தொள்ளாயிரத்திருபதாம்   -   தொளாயிரத்திருபது
கொடிகளாகும்,   இரண்டு   நூற்றறுபத்தாயிரத்தோடு   -   இரண்டு
லக்ஷத்தறுபத்தாறாயிரத்துடனே,  நிரந்த - சேர்க்கப்பட்ட, நானூறுகள்
- நானூறு என்கிற  கணக்கையுடைய கொடிகள், நடுவு - இரண்டாஞ்
சகதி மண்டபத்தின் கூடங்களில், நின்ற - இராநின்றன, எ-று. (91)

 1139. சுன்னையெட் டெட்டுநான் கைந்தி ரண்டிடைச்
     சொன்னதா னத்தின்மூன் றாவ தின்றொகை
     யின்ன கூடத்த கோட்டகந் தன்மிசைச்
     சொன்ன சொன்னவை யங்கங் கிரட்டியே.

    (இ-ள்.)  மூன்றாவதின் -  மூன்றாஞ் சகதி மண்டபத்தில், (மேல்
கூடங்களில்  உள்ள கொடிகள்), சுன்னை - (ஒன்றாவது ஸ்தானத்தில்)
ஸுன்னமும் (அதாவது : பூஜ்யமும்), எட்டு - (பத்தாவது ஸ்தானத்தில்)
எட்டும்,  எட்டு -   (அதன்மேல்  நூறாவது  ஸ்தானத்தில்)  எட்டும்,
நான்கு -  (ஆயிரத்தானத்தில்)   நாலும்,   ஐந்து  -   (பதினாயிரத்
தானத்தில்)  ஐந்தும்,  இரண்டு -  (லட்ச  ஸ்தானத்தில்)   இரண்டும்,
(ஆக), இடைச்சொன்ன -  இவற்றினிடமாகச்  சொன்ன, தானத்தின் -
ன்தான வரிசையின் படி, (ஆகிய), தொகை - தொகையாகிய இரண்டு
லக்ஷத்து ஐம்பத்து நாலாயிரத்து  எண்ணூற்று எண்பதாகும், கூடத்த -
கூடங்களினுடைய      கொடித்      தொகைகளும்,      இன்ன -
இத்தன்மையனவாகும்,   கோட்டகந்தன்   மிசை  -  கோட்டகத்தின்
மேலுள்ள    கொடிகள்,     (எவ்வளவென்றால்),      அங்கங்கு -
அவ்வவ்விடங்களில்,   சொன்ன   சொன்னவை  -  கூடங்களுக்குப்
பலவாகச்  சொல்லப்பட்ட  தொகைகளின்,   இரட்டியே - இரட்டித்த
இரட்டித்த தொகைகளாகும், எ-று. (92)