1140. பட்டிகைத் தலத்தின்மேற் பைம்பொற் கோயிலி
னெட்டலாத் திசைமுகத் திருந்த
மண்டபத்
துட்டொளி திரண்டுகா வதமொன்
றோக்கமும்
விட்டொளி துளும்பவெஞ் சுடரி னின்றவே.
(இ-ள்.)
பைம்பொன் - பசுமை பொருந்திய பொன்னாலாகிய,
கோயிலின் - ஸ்ரீநிலயமாகிய கோயிலின், எட்டலாத் திசைமுகத்து -
எப்பக்கங்களிலும், இருந்த - சூழ்ந்திராநின்ற, பட்டிகைத் தலத்தின் -
இப்போது சொன்ன திரிமேகலைகளாகிய ஜகதீ தலத்தின், மேல் -
மேலே, இருந்த - (இப்போது
சொல்லப்பட்ட கூடங்கள்
தோட்டகங்கள் கொடிகளோடும்
விளங்கி)
யிருந்த,
மண்டபத்துட்டொளி - மண்டபங்களின் ஜோதியானது,
திரண்டு -
சேர்ந்து, வெம் - (யாவர்களும்) விரும்பும்படியான, சுடரின் - பால
சூர்யனைப்போல, ஒளி விட்டு - எவ்விடங்களிலும்
கிரணங்களை
வீசி, துளும்ப - ததும்ப,
ஒக்கமும் - அம்மண்டபங்களின்
உன்னதங்கள், காவதமொன்று - ஒவ்வொரு
காதமாக, நின்ற -
இராநின்றன், எ-று. (93)
1141. மகரவாய் மண்டபத் தரைய வாயநாற்
சிகரவாய்ச் சினகரஞ் சிவஞ்செய்
மூர்த்திகள்
பகரொணா தனபரி வாரந் தன்னொடு
புகரிலா வானத்தம் போன்று தோன்றுமே.
(இ-ள்.) மகரவாய் மண்டபத்து
- முன்சொன்ன ஜகதீதலத்து
நிதானமான அளவையுடையனவாகி
மூன்று சுற்றாகிய
அம்மண்டபங்களில், (நாலு மஹா
வீதியில் தவிர நாலு
கோணங்களிலும்), நால் வாய - நாலு
பக்கமும் வாசற்படிகளை
யுடையனவாயும், வாய் சிகர - பொருந்திய
கோபுரங்களை
யுடையனவாயும், (உள்ள), சினகரம் - ஜின சைத்யாலயங்களாம்,
(அதாவது : ஒவ்வொரு கோணத்திலும் தனித்தனியாக
ஆறாகும்),
அரை - அந்த சைத்யாலயங்களின் மத்தியத்தில், பகரொணாதன -
சொல்ல முடியாத அழகையுடையனவாகிய,
சிவஞ்செய் -
(பார்க்கப்பட்டவர்களுக்குப்) புண்ணியத்தைச் செய்கின்ற,
மூர்த்திகள்
- ஜினப்பிரதிமைகள்,
பரிவாரந்
தன்னொடு -
சத்திரத்திரயசாமராதிப்ராதிஹார்யங்களுடன்,
புகரிலா - குற்றமில்லாத,
வான் - அழகிய, அத்தம் போன்று -
கண்ணாடியைப்போன்று,
தோன்றும் - விளங்கும், எ-று. (94) 1142. வில்லுமிழ்ந் திடுமணி மிடைந்த மேனிய
நல்லநா மங்கணா லாறு மேவின
செல்வமுந் திண்மையு மறிவும் வென்றியு
நல்குவ நாற்றிக்கு முகமு நான்கவே.
|