(இ-ள்.) (அந்த
ஜினப் பிரதிமைகள்),
வில்லுமிழ்ந்திடும் -
கிரணத்தை வீசும்படியான, மணி
- அழகை, மிடைந்த -
சேர்ந்திராநின்ற, மேனிய - ரூபங்களையுடையனவாம்,
நல்ல -
நன்மையாகிய, நாலாறு - இருபத்துநான்கு, (தீர்த்தங்கரர்களுடைய),
நாமங்கள் - பெயர்களை, மேவின - பொருந்தினவாம், செல்வமும் -
(வணங்குகின்றவர்களுக்கு)
சம்பத்தும்,
திண்மையும் -
பராக்கிரமத்தையும், அறிவும் - ஞானமும், வென்றியும் -
ஜெயமும்,
நல்குவ - கொடுப்பவைகளாம், நாற்றிக்கும்
- நாலு திக்குகளிலும்,
முகமும் - முகங்களும், நான்க - நாலாகவுடையனவாம், எ-று.
வாசற்படியையுடைய திக்குகள்
தோறும் முகம் என்றதனால்
சதுர்முகபஸ்திகளாக மூன்று சகதியிலும் இருப்பதால்
எழுபத்திரண்டு
தீர்த்தங்கரர்களுடைய (அதாவது : திரிகால
தீர்த்தங்கரர்களுடைய)
பெயர்களாகும் என்பது பெறப்படும். (95)
வேறு.
1143. நாத னுள்ளுறு நான்முகம் போலுநல்
வாய்த னான்குடை மண்டப நான்கினுட்
சாத கும்பமஞ் சங்கணா லைந்துவில்
லோது மைம்பது மோங்கி யகன்றவே.
(இ-ள்.)
உள்ளுறும் - உள்ளேயடைந்திராநின்ற,
நாதன் -
ஜினேந்திரனுடைய, நான் முகம்போலும் - சதுரானனத்துவம் போலும்,
நல் - நன்மையாகிய, வாய்தல்
நான்குடை - நாலு மஹா
திக்குகளிலும் நாலு வீதி வழிகளையுடைய,
மண்டபம் - இந்த
ஜகதீதல மண்டபங்கள் மூன்றிலும், நான்கினுள்
- நாலு மஹா வீதி
வாசற்படி வழிகளில், (ஒவ்வொரு திக்கு வழிகளிலும்), சாதகும்பம் -
ஸ்வர்ணத்தினாலாகிய கும்பங்களை
நடுவில் மேலே
வைக்கப்பட்டனவாகிய, மஞ்சங்கள் - மேடைகள், நாலைந்து வில் -
இருபது வில்லும், ஒதும் - சொல்லப்பட்ட, ஐம்பதும்
- ஐம்பது
வில்லும், ஓங்கி - உயர்ந்து, அகன்ற - அகன்றனவாம், (அதாவது :
இருபது வில்லுயர்ந்தும், ஐம்பது
வில்லகன்றும் ஒரு மண்டப
வழிக்கொன்றாக மூன்றுக்கும் மூன்று மேடைகள்
நாலு திக்கிலும்
இராநின்றன) எ-று. (96)
1144. மாரி போல முழங்குவ மஞ்சின்மேல்
பேரி நான்முகச் சங்க மிரண்டுள
காரி னுண்மலி சூரிய னேர்பொனின்
வாரின் வந்திழி கண்டையு மாகுமே. (இ-ள்.)
அம்மஞ்சின் மேல் -
அந்த மேடைகளில்
ஒவ்வொன்றின்மேலும், மாரி போல - வர்ஷா காலத்து மேகம் போல,
முழங்குவ - கர்ஜிக்கும்படியான,
|