பேரி - முரசமும், நான் முகம் - நான் முகமுடைய, சங்கம் - சங்கும்,
(ஆகிய) இரண்டு - இந்த இரண்டும், உள - உள்ளனவாம்,
காரினுள்
- அழகோடு கூடிய அம்மண்டபத்தினுள், மலி -
ஒளி நிறைந்த,
சூரியனேர் - சூர்யபிம்பம்
போன்றதும், பொன்னின்
-
பொன்னாலாகிய, வாரின் - சங்கிலியினின்றும்,
வந்திழி - வந்து
அம்மேடையில் தொங்குகின்ற, கண்டை - சேமங்கலம் (அதாவது :
ஜெயமங்களம் என்னும்
ஜெயகண்டையானது,) ஆகும் -
விளங்குவதாகும், எ-று. (97)
வேறு.
1145. கடிகையுஞ் சாமமுங் கலந்த சந்தியு
முடிவினிற் கண்டைசங் கங்கள் பேரிகை
யிடியெனத் தம்மிலே முழங்கி யின்னொலிப்
படுவதா முப்பதோ சனைப ரக்குமே.
(இ-ள்.)
கடிகையும் - ஒரு நாழிகையும்,
சாமமும் - ஒரு
சாமமும், கலந்த சந்தியும் -
நாழிகையும் சாமமும் கலந்த
சந்திப்பாகிய பதினைந்து நாழிகையும்,
முடிவினில் - முடிந்த
காலமாகிய இவைகளில், (அதாவது : நாழிகை முடிவில்), கண்டை -
ஜெயகண்டையும், (ஒரு சாம முடிவில்), சங்கங்கள் - சங்குகளும்,
(பதினைந்து நாழிகையில்), பேரிகை - பேரிகையும், (சப்திப்பனவாகிப்
பதினைந்து நாழிகை சென்ற வேளையில்,
நாழிகை முடிவும் சாம
சந்தியும் வருவதால் அப்போது இந்த
மூன்று வாத்தியங்களும்),
இடியென - மேககர்ஜனையைப்போல, தம்மிலே
- தமக்குள்ளே
மூன்றும் ஒன்றாகச் சேர்ந்து, முழங்கி
- கர்ஜிக்க, இன் -
இனிமையாகிய, ஒலி - அந்த சப்தமானது, படுவதாம் -
வியாபிக்குந்
தூரமாகிய, முப்பதோசனை - முப்பது யோஜனை தூரம்,
பரக்கும் -
விஸ்தரித்துக் கேட்கும், எ-று. (98.) 1146. பெருமலர் மாரிய பேரி
யாதியின்
றிருநிலை வாய்தல்க ளிரு மருங்கிசை
மருவிய கருவிக ளேந்திக்
கந்தப்ப
வரசர்க டேவிமார் பாட லாகுமே.
(இ-ள்.) பேரியாதியின்
- பேரிகை முதலாகிய இப்போது
சொன்ன வாத்தியங்களையும், பெரும் - மிகுதியாகிய, மலர் மாரிய -
தேவர்களால் சொரியப்பட்ட புஷ்ப வருஷங்களையுமுடைய,
திருநிலை
- இந்த ஸ்ரீ நிலயத்தினுடைய, வாய்தல்கள் - வழிகளின், இருமருங்கு
- இரண்டு பக்கத்திலும், இசை
- கீதங்களை, மருவிய -
சேர்ந்திராநின்ற, கருவிகள் - விணை
முதலாகிய வாத்தியங்களை,
ஏந்தி - தரித்து, கந்தப்பவரசர்கள் -
கந்தர் வேந்திரர்களுடைய,
தேவிமார் -
|