தேவியர்களின், பாடலாகும்
- பாடல்கள் நிகழ்கின்ற
சங்கீத
மண்டபங்களாகும், எ-று. (99)
1147. மங்கல நிரையவே வாய்தல் தோரணப்
பந்தியி னிரையவே படி முடிவெலா
மிங்கெலா வாய்தலுங் காவ லோம்பலிற்
றங்கினார் சோதமீ சான ராசரே.
(இ-ள்.)
படி முடிவெலாம் - இந்த ஜகதீதல பூமிகளிலெல்லாம்,
மங்கலம் - அஷ்டமங்கலங்களின்,
நிரைய -
வரிசைகளையுடையனவாம், வாய்தல் - வாசற்படி வழிகளெல்லாம்,
தோரணம் - மகர தோரணங்களினுடைய, பந்தியின் - வரிசைகளின்,
நிரைய - ஸமூகங்களையுடையனவாம், இங்கு
- இவ்விடங்களில்,
எலாவாய்தலும் - எல்லா வாசற்படிகளிலும், காவலோம்பலிற் -
காவல்
செய்வதில், சோதமீசானராசர் -
ஸௌதர்ம ஈசான கல்பத்து
தேவாதிபதிகள், தங்கினார் - தங்குதல் கொண்டார்கள், எ-று. (100) 1148. இரவியெண் ணரியவாம் பரிதி யின்னிடை
மருவிய தெனமணி யொளிசெய் மண்டலத்
துருவொரு பிழம்பதா யொளியிற் றோன்றிடுந்
திருநிலை யம்மெலாந் திருநி லையமே.
(இ-ள்.) எண்ணரியவாம்
- அஸங்கியாதமாகிய், இரவி -
சூர்யர்கள், பரிதியின்னிடை - பரிவேஷ்டத்தினுடைய
மத்தியில்,
மருவியதென - சேர்ந்து பிரகாசிப்பது போல,
மணியொளி செய் -
இரத்தின ஜோதி செய்கின்ற, மண்டலத்து
- பரிவேஷ்டத்தினுள்,
உருவு - இந்த ஸ்ரீ நிலயத்தின் ரூபமானது, ஒரு பிழம்பதாய் - ஒரே
கூட்டமாக, ஒளியில் - பிரகாசத்தோடு, தோன்றிடும்
- காணப்படும்,
திருநிலையம்மெலாம் -
இப்படிப்பட்ட ஸ்வரூபமுடைய
ஸ்ரீநிலயமெல்லாம், திருநிலையம்மே - ஸ்ரீ நிலையமே, எ-று.
இங்ஙனங் கூறியதனால், இதற்குவேறொன்று உபமையாகாதென்பது
பெறப்படும். (101) 1149.
பலநெறி யொளிமணி பயின்ற பந்தியு
மிலதையும் வல்லியு மிருந்த
கூடமும்
விலையல்குன் மடநல்லார் மேக
லைகளு
முலைகளும் போன்மயக் குறுக்கு
முற்றுமே. (இ-ள்.)
முற்றும் - அந்த ஜகதீதலங்கள்
முழுதும், பல -
பலவாகிய, நெறி - வழிப்பாட்டையுடைய,
ஒளி - பிரகாசியாநின்ற,
மணி - இரத்தினங்களி
|