54மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

   (இ-ள்.)  மேனாள் - முற்காலத்தில், இறந்த - ஜன்மமெடுத்திறந்த.
நம்   -  நம்முடைய,   பிறவி   -   பிறப்புக்கள்,  எண்ணுதற்கு  -
இத்தனையென்     றெண்ணுதற்கு,       அரிய     -    முடியாத
தன்மையையுடையனவாம்,   தம்முள்  -  அப்படிப்பட்ட  அனந்தம்
பிறப்புக்களில்,   கறந்து   -  சரீரத்தினின்று   நீக்கி,   கொண்டு  -
கைக்கொண்டு,  உயிரை  - ஆத்மனை,  உண்ணும் - விழுங்குகின்ற,
காலன்வாய்  -   (காலத்திரவிய  மென்னும்)  அந்திய  காலனுடைய
வாயிலே, பட்டபோழ்தும் - அகப்பட்ட காலத்திலும், கதிகணான்கில் -
சதுர்க்கதியில்,  நாம்  - ஆத்மர்களாகிய  நாம், பிறந்து - மறுபடியும்
மறுபடியும் பிறந்து, பெரும் - பெரிதாகிய, துயர் - இப்படி ஜனனமரண
முதலாகிய     அநேக     துன்பங்களில்,     உழக்கும்போதும்  -
வருந்தும்போதும், துறந்திடா - நம்மைவிட்டு  நீங்காத, வினைகளன்றி
- கருமங்களேயல்லாமல், துணை   -  துணையாவது,  பிறிதில்லை -
வேறொன்றுமில்லை, எ-று. (112)

 113. காதிக ணான்கும் வீய்ந்த கணத்துளே காணற் பாடி
     லாதியாய்ப் பிறிதி னாய வொன்றிடு மனந்த நான்மை
     யோதினோர் வகையி னாற்ற லுயிரினான் முடிந்த
                                         முன்னே
     காதியா மேகஞ் சூழ்ந்த கதிரென நின்ற கண்டாய்.

    (இ-ள்.) பிறிதினாய - (ஆத்மனுடைய) விபாவத்தன்மையாலாகிய,
காணற்பாடில்லாதியாய் - தர்சனாவரணீய முதலாகிய, காதிகணான்கும்
- நாலுவிதமான காதி கருமங்களும், வீய்ந்தகணத்துளே - (ஆத்மனது
சுத்த  ஸ்வபாவத்தன்மையால்) நீங்கின காலத்தில், அனந்தநான்மை -
அனந்த  சதுஷ்டயங்கள்,  ஒன்றிடும்  -  ஆத்மனிடத்தில்  சேரும்,
ஓதின்  -   சொல்லுமிடத்தில்,   ஓர்   -   ஒப்பற்ற,  வகையின்  -
விதாயத்தினால்,  ஆற்றல்  -  இந்த அனந்த சதுஷ்டய சக்தியானது,
உயிரினால் -  ஆத்மனாலேயே,  முடிந்த - செய்து முடிக்கப்பட்டது,
முன்னே -   (அப்படிப்   பெறாததற்கு)   முன்னம்,   காதியாம்  -
காதிகர்மமாகிற,  மேகம்  -  மேகத்தினால்,  சூழ்ந்த  -  மூடப்பட்ட,
கதிரென  -  சூர்யனைப்போல, நின்ற - நின்றதாகும், எ-று.

       கண்டாய் - ஓர்வகைச் செய்யுளசை.

      காதிகர்மம் நான்காவன :- ஞானாவரணீயம், தர்சனாவரணீயம்,   
மோஹநீயம்,   அந்தராயம்   என்பன.  அனந்த சதுஷ்டயம் நான்காவன :
அனந்த ஞானம், அனந்த தர்சனம், அனந்த சுகம், அனந்த வீர்யம்
என்பனவாம்.                        (113)

 114. குற்றமோர் மூன்று நான்கு கதிகளிற் பொறிக ளைந்திற்
     பற்றிய காய மாறிற் பழவினைத் திரிவோ ரேழிற்
     சுற்றிய வினைக ளெட்டிற் றோற்றிய சுழற்சி கண்டாய்
     கற்றவர் கடக்க வெண்ணு மாற்றிது கடிகொ டாரேய்.

      (இ-ள்) கடி - வாசனையை, கொள் - கொண்ட,  தாரோய் -
மாலையை      யணிந்திராநின்ற    சஞ்சயந்தனே!,      கற்றவர்  -
கல்வியறிவுடைய ஸம்மியக் திருஷ்டி