னால், பயின்ற
- செய்திராநின்ற, பத்தியும் - பந்தி வரிசைகளும்,
இலதையும் - இலைக்கொடிகளின் வேலையும், வல்லியும் - கோல்
கொடி வேலைகளும், இருந்த - செய்திராநின்ற,
கூடமும் - கூட
கோட்டகங்களும், (பார்த்தால்), விலையல்குன்மடநல்லார்
- வேசியா
ஸ்த்ரீகளுடைய, மேகலைகளும் - மேகலாபரணங்களும்,
முலைகளும்
- ஸ்தனங்களும், போல் - போல, மயக்குறுக்கும்
- பிரமிக்கச்
செய்யும், எ-று. (102)
1150. துவர்ப்பசை நான்கிலார்க் கிறைவன் றொன்னகர்ச்
சுவர்த்தல் நான்கிரு காத மோங்கிமா
தவர்க்கிறை நகர்ச்சுவ ரகலம் பாதமே
லுவப்பமூன் றோசனை விரிந்த கன்றவே.
(இ-ள்.)
படி முடிவெலாம் - இந்த ஜகதீதல பூமிகளிலெல்லாம்,
மங்கலம் & துவர்ப்பசை நான்கு - சதுஷ்கஷாயங்கள், இலார்க்கு -
இல்லாதவர்களுக்கு, இறைவன் - நாதனாகிய
ஜினேந்திரனுடைய,
தொல் - பழமையாகிய (அதாவது : பாரம்பரியமாக வராநின்ற),
நகர்
- சமவஸரணத்தில், (லட்சுமீவர மண்டபத்தின்),
சுவர்த்தலம் -
சுற்றுச்சுவர்கள், இரு - பெரிதாகிய, நான்கு
காதமோங்கி - நாலு
காத உன்னதமாகி,
மாதவர்க்கு - கணதராகி
மஹா
முனிவரர்களுக்கெல்லாம், இறை - நாதனாகிய அந்த பகவானுடைய,
நகர்ச்சுவர் - முன்சொன்ன கோவில்
சுவரினுடைய, அகலம் -
அகலமானது, பாதம் - கால் காதமாம், மேல் - (அந்தச் சுவர்போக)
அதற்கு மேல், உவப்பம் - உள்ளகலமானது, மூன்றோசனை -
மூன்று
யோஜனை, விரிந்து -
விசாலமாகிய, அகன்ற
- அகலத்தையுடையதாகும், எ-று. (103)
1151. தலங்களி னுயரமா மறுபத்து நான்குவில்
விலக்குட னறுபத்து நான்கு வீழ்ந்தவ
னிலங்கண்முன் னூற்றெழு பத்தோ
ரைந்துகீழ்த்
தலந்தன்மண் டலங்கண்மூ வாயி ரங்களாம். (இ-ள்.)
தலங்களின் - (முன் சொன்ன அந்தச் சுவருக்குமேல்
கோபுரத்தின்) தலங்களினுடைய, உயரம் - உன்னதமானது,
அறுபத்து
நான்கு வில் - (ஒவ்வொன்றுக்கும்) அறுபத்து
நாலுவில், ஆம் -
ஆகும், உடன் - உடனே, விலங்கு - குறுக்காக,
அறுபத்து நாலு
வீழ்ந்து - (அடிநிலையாகிய பன்னிரண்டு காதம்
அதாவது மூன்று
யோஜனை அகலத்தினின்றும்) அறுபத்து நாலுவில்லகலம் சுற்றிலும்
மேகலையாக வீழ்ந்து, நிலங்கள் -
(மறுபடியும் அறுபத்துநாலு
வில்லுயர்ந்து அதன் மேல்
அறுபத்து நாலுவில் குறுக்காகச்
சுற்றிலுமகன்று மேகலையாகி
இம்மாதிரியாகவே
மேலே
மேலே) நிலைகளானவை,
முந்நூற்றெழுபத்தோரைந்து -
முந்நூற்றெழுபத்தைந்து, கீழ்
- அடியிலாகிய, தலந்தன் -
அறுபத்துநாலுவில்
|