லகன்ற முதனிலையாகிய
தளத்தில், மூவாயிரம் - மூவாயிரமாகிய,
மண்டலங்கள் - மேடைகள், ஆம் - ஆகாநின்றன, எ-று. (104)
1152. ஆயவித் தலந்தொறும் மண்டல மெட்டினை
மாயச் சென்றொழிந் திருந்த வெட்டின்மேற்
றூயமண் டலத்தொகை யிலக்க மைந்தினோ
டாயிர மறுபத்து நான்கு மாகுமே.
(இ-ள்.)
ஆய - இப்படி முதனிலையில் மூவாயிரங்களாகிய,
மண்டலம் - மேடைகளானவை,
இத்தலந்தொறும் -
இந்தக்கோபுரத்தின் மேல் மேல்
நிலைகள் தோறும், எட்டினை -
எட்டெட்டு மேடைகளாக, மாயச்சென்று - குறைவாகிச்சென்று,
மேல்
- மேனிலையாகிய முந்தூற்றெழுபத்தைந்தாம் நிலையில்,
ஒழிந்திருந்த
- மீந்து நின்ற மேடைகள், எட்டு
- எட்டேஆகும், தூய -
பரிசுத்தமாகிய, மண்டலத்தொகை
- இந்தக்கோபுரத்தின்
மொத்தமேடைகளின் சங்கியைகள், இலக்கமைந்தினோடு
- ஐந்து
லட்சத்தோடு, ஆயிரமறுபத்து
நான்குமாகும் - அறுபத்து நாலாயிரங்களாகா நின்றன, எ-று. (105) வேறு.
1153. கடித டத்தள வுள்ள வரண்டகம்
படியி னாற்றடி நான்கிற் பரந்தன
கொடி நிரைத்தன கோயி னிலங்களை
மடநல் லார்கலை போல வளைந்தவே.
(இ-ள்.) கோயில் -
ஸ்ரீ நிலயமாகிய கோயிலில், நிலங்களை -
இப்போது சொன்ன கோபுரத்தில் ஒவ்வொரு நிலங்களிலும்
அறுபத்து
நாலு வில்லுயர்ந்த
விளம்புகளில், கடிதடத்தளவுள்ள -
துவஜக்கொடியில் பேர் பாதிப் பிரமாணமான, வரண்டகம் கொடி -
வரண்டகத்துவஜங்கள், நிரைத்தன - சூழ்ந்தனவாகி, படியினால்
-
கிரமத்தினால், தடிநான்கில் - நான்கு வில்லுக்கொன்றாக, பரந்தன -
பரவினவாம், (அவற்றைப்
பார்த்தால்), மடநல்லார் -
ஸ்தரீமார்களுடைய, கலைபோல - மேகலை
போல, வளைந்த -
சூழ்ந்திராநின்றனவாம், எ-று. (106) 1154.
தேசுலாத் திருநிலை யத்தின் மேனிலங்
கோசநீண் டகன்றுவச் சிரத்த
டக்கமாய்
மாசிலா மணிகளான் மலிந்த
தன்மிசைக்
கோசநான் குயர்ந்துபொற் கும்ப மாகுமே. (இ-ள்.)
தேசுலாம் - ஜோதியால்வியாபித்திராநின்ற,
திருநிலையத்தின் - ஸ்ரீ நிலய
கோபுரத்தின், மேனிலம் -
முந்நூற்றெழுபத்தைந்தாவது நிலையில்,
|