கோச நீண்டகன்று -
ஒரு குரோசம் அகல நீளமாகி, வச்சிரத்து -
வஜ்ர ரத்தினத்தால், அடக்கமாய் - மேலே தளமாகச் செய்து,
அதன்
மிசை - அதன் மேல், மாசிலா - குற்றமில்லாத,
மணிகளால் -
இரத்தினங்களால், மலிந்து - நிறைந்து, கோச நான்குயர்ந்து -
நாலு
குரோசம் உன்னதமாகி, பொற்கும்பமாகும் -
பொன்னலாகிய
கடமானது ஆகாநின்றது, எ-று. (107)
வேறு.
1155. இரவிவந் துதய மேறி யிருந்தது போலு மிந்தத்
திருநிலை யத்தி னுச்சி செம்பொற்கும்
பத்த சென்னி
மருவிய கமலத் துட்செம் மாமணி
பாத மோங்கி
விரகினாற் கோசம் பாதம்
விரிந்துகீழ் சுருங்கிற்றாம்மேல்.
(இ-ள்.)
இரவி - ஸூர்யன், உதயமேறி
வந்து - உதயாசல
பர்வதத்தின் மேல் உதயமாகி
வந்து, இருந்தது போலும் -
பிரகாசித்திருந்ததற்குச் சமானமாகிய, இந்தத் திருநிலையத்தின் - இந்த
ஸ்ரீநிலைய கோபுரத்தின், உச்சி - மேலே யிராநின்ற, செம் - சிவந்த,
பொற்கும்பத்த - பொன்னாலாகிய கும்பத்தினுடைய,
சென்னி -
அக்கிரத்திலே, மருவிய - சேர்ந்திராநின்ற,
கமலத்துள், தாமரைக்
கமலத்திலே, (உள்ள), செம்மாமணி
- பத்மராகரத்தினமானது,
பாதமோங்கி - முன்
சொன்ன கும்பத்தின் உயரத்தில்
நாலிலொன்றாகிய கால்பாகம்
(அதாவது : ஒரு குரோசம்)
உன்னதமாகி, கீழ் - அடியில், கோசம்
பாதம் - கால்குரோசம்,
விரிந்து - அகன்று, விரகினால் - கிரமத்தினால்,
மேல் - மேலே,
சுருங்கிற்றாம் - சுருங்கப்பட்டதாம், எ-று.
(108) 1156. இத்தலத்
தகத்தி னுள்ளா லினமணிக் குமுத வீற்றின்
வைத்தபொற் கமலஞ் சூழ்ந்து
காவத மாய தன்பான்
முத்தமா லைகள்போய்க் கந்த குடியினை முழுதுஞ் சூழ்ந்த
தத்துநீர் கங்கை கூடந் தன்மிசைச்
சென்ற தன்றே.
(இ-ள்.) இத்தலத்து - (இப்போது சொல்லிவந்த
விதமாயிராநின்ற
முந்நூற்றெழுபத்தைந்து நிலைகள்
பொருந்திய
இந்தக்
கோபுரத்தலங்களினுடைய, அகத்திலுள்ளால் -
முதனிலையின்
கீழுள்ள மண்டபத்தின் மேலே மத்தியில் (அதாவது :
பன்னிருகாத
மகன்ற அம்மண்டபத்தின்
மேலே நடுவில் அதாவது :
அம்மண்டபத்தின் கீழே நடுவிலிரா
நின்ற ஒரு காத மகன்ற
கந்தகுடிக்கு நேராக மேலே), இனம் - உயர்ந்த இனமாகிய, மணி -
இரத்தினத்தாலே செய்த, குமுதவீற்றின்
- குமுத விருத்தத்தினாலே
(அதாவது : கர்ணிகையாக்கிருதியாக உள்ள சிகரத்தாலே), வைத்த -
நடுவில் வைக்கப்பட்டதாகிய, பொற்கமலம்
- பொன்னாலாகிய
தாமரைக்கமலமானது, காவதமாய் - ஒரு காதவகல
|