முடையதாகி, சூழ்ந்து
- வ்ரத்தமாகச் செய்திராநின்றதாகி, அதன்
பால் - அந்தக் கமலத்தினிடம், முத்த மாலைகள் - முத்து மாலைகள்,
போய் - தொங்கினதாகிப் போகி,
கந்த குடியினை - அதற்கு
நேராகக் கீழாகவிராநின்ற கந்தகுடி
மண்டபத்தை, முழுதும் -
முழுமையும், சூழ்ந்த - சூழ்ந்து தொங்கின,
(அதைப்பார்த்தால்),
கங்கை கூடந்தன் மிசை - கங்கா தேவியின்
மாளிகையது சிரசின்
மேலே, தத்து நீர் - இமையோத்கிரி
பர்வதத்தினின்றும் ததும்பி
விழுகின்ற ஜலமானது,
சொரிவதொத்த -
சொரிகின்றதற்குச்
சமானமாயிரா நின்றது, எ-று. (109)
1157. பருமணி கூட மொன்றின் பக்கத்தி னிரண்ட வற்றை
மருவிய விரண்டு தூபை மண்டலம் மற்றி தன்கட்
பெரியதெண் ணான்கு மெட்டும் வில்லுயர்ந் தகன்ற தன்றன்
னரையதன் னரைய நின்ற வந்தர நுகம தாமே.
(இ-ள்.)
மண்டலம் - (முன் சொன்ன
ஸ்ரீ நிலைய
கோபுரத்தினுடைய நிலைகளிலிராநின்ற மேடைகளில்)
ஒவ்வொரு
மேடைகளிலும், மணி - இரத்தின நிர்மிதமாகிய, பரும் - பெரிதாகிய,
கூடமொன்று - ஒரு கூடமானது மத்தியிலிராநின்றது,
அவற்றை -
அந்தக் கூடத்தை, மருவிய, சேர்ந்திரா
நின்றதாகிய, இரண்டு
பக்கத்தின் - இரண்டு பக்கங்களிலும்,
இரண்டு தூபை - ஒரு
பக்கத்துக்கு இரண்டு தூபைகள்
(அதாவது : கூடத்தைச்
சேர்ந்தாப்போல பெரிய தூபையும்
அதன் பக்கத்தில் சிறிய
தூபையுமாக இப்படி ஒரே மேடையில், நடுவில்
கூடமும் கூடத்தின்
ஒரு பக்கத்துக்கும் பெரிதும் சிறிதுமாகிய இரண்டு தூபைகளும், ஆக
ஐந்தும்) இராநின்றன, மற்றிதன்கண் - இந்த ஐந்துகளில், பெரியது -
பெரிதாகிய கூடமானது, எண்ணான்கு வில்லுயர்ந்து -
முப்பத்திரண்டு
வில்லு உன்னதத்தையுடையதாகி, அதன்
தன்னரை - அந்தக்
கூடத்தின் உன்னதம் அகலங்களில்
பேர்பாதியாகிய பதினாறு
வில்லுயரமும் நாலு வில்லகலமுமாகிய பெரிய
தூபைகளும்,
அதன்னரை - அதில் பாதியாகிய எட்டு வில்லுயரமும்
இரண்டு
வில்லகலமும் சிறிய தூபைகளுமாகி, நின்ற - இராநின்றன, அந்தரம் -
ஒவ்வொரு ஸ்தூபைகளுக்கும் கூடத்துக்கும் இடைவிட்ட
இடமானது,
நுகமதாம் - ஒரு வில்லுப் பிரமாணமாகும், எ-று. (110)
1158. நிலங்கணான் கிரண்டொன் றாகி நின்றமா கூட மாகி
யிலங்குமண் டலங்க டந்த மிடைநுக
மிரண்ட வாகும்
மலிந்துவெண் கொடிக ணின்ற மண்டல மொன்றி
னூறும்
விலங்கன்மே லெழுந்த வன்னக்
குழாத்தினாற் பத்து நான்காம். (இ-ள்.)
நிலங்கணான்கு - (மேடையின்
நடுவிலிருக்கப்பட்ட
கூடமானது) நாலு நிலையும், இரண்டு - (அதன் ஓரத்தில்
இராநின்ற
பெரிய ஸ்தூபை) இரண்டு நிலையும், ஒன்றாகி - ( அதன்
ஓரத்தில்
இராநின்ற சிறிய ஸ்தூபை) ஒரு நிலை
|