யாகியும், மாகூடமாகி - பெரியதாகிய சிகரங்களாகியும்,
மண்டலங்கள்
- ஒவ்வொரு மேடைகளும், நின்ற - நிலை பெற்றனவாய், இலங்கும் -
விளங்கும், மண்டலங்கள் தந்தமிடை - ஒவ்வொரு
மேடைகளுக்கும்
உள்ள இடை வெளியானது, நுகமிரண்டவாகும் -
இரண்டு வில்லுப்
பிரமாணமாகும், (அதாவது : இரண்டு வில்லிடை
விட்டு ஒவ்வொரு
மேடையும் இருக்கும்), மண்டலமொன்றின் -
மற்றும் அந்த
மேடைகளில் ஒவ்வொன்றிலும், மலிந்து - நிறைந்து, வெண் கொடிகள்
- வெளுப்பாகிய த்வஜக் கொடிகள், விலங்கல் மேல் -
பர்வதத்தின்
மேல், எழுந்த - எழுந்து பறக்கின்ற, அன்னக்குழாத்தின் -
ஹம்ஸ
பக்ஷிக்கூட்டங்கள் போல, நூறும் நாற்பத்து
நான்காம் - நூற்று
நாற்பத்து நான்காகும், எ-று. (111)
1159. ஈரெட்டா யிரமு மீரா றிலக்கமுங் கோடி யெட்டும்
வாரத்தை யட்டார் கோயின் மண்டலக் கொடியி னீட்டம்
தேரட்டார் கோயிற் கீழைத் தலத்தின்மேல் வரண்ட கத்த
வோரெட்டின பாதி யொன்பா னெட்டஞ்சேழ் தானத் தாலே.
(இ-ள்.)
வாரத்தை - ஆசையை, அட்டார்
- விலக்கி
ஜயித்திராநின்ற ஜினேந்திரனுடைய, கோயில்
- ஸ்ரீ நிலயத்தின்
(கோபுரத்திலிருக்கப்பட்ட), மண்டலம் - மேடைகளின்
மேலிராநின்ற,
கொடியின் - த்வஜக்கொடிகளுடைய,
ஈட்டம் - மொத்தத்
தொகையானது, கோடி யெட்டும் - எட்டுக்கோடியும்,
ஈராறிலக்கமும்
- பன்னிரண்டுலட்சமும், ஈரெட்டாயிரமும் -
பதினாறாயிரமுமாகும்,
தேர் - ரதம்போல், அட்டு - (தேவர்களால்) நிருமிதஞ் செய்து, ஆர்
- நிறைந்திராநின்ற, கோயில் - இந்த ஸ்ரீநிலயகோபுரத்தின்,
கீழைத்தலத்தி ன்மேல் - அடி நிலையின் விளிம்புகளில்,
வரண்டகத்த
- (இராநின்ற) வரண்டகக் கொடிகளின்
சங்கியைகளானவை,
தானத்தால் - ஸ்தானவரிசைக்கிரமத்தால், ஓரெட்டின்
பாதி - (ஏக
ஸ்தானத்தில்) நாலும், ஒன்பான் - (தசஸ்தானத்தில்) ஒன்பதும்,
எட்டு
- (சதஸ்தானத்தில்) எட்டும், ஜஞ்சு - (ஸஹஸ்ர ஸ்தானத்தில்) ஐந்தும்,
ஏழ் (தசஸஹஸ்ர ஸ்தானத்தில்) ஏழும், (ஆகிய
எழுபத்தையாயிரத்து
எண்ணூற்றுத் தொண்ணூற்று நாலு கொடிகள் ஆகும்), எ-று. (112)
இதில் நூற்று
நாற்பத்துநாலு கொடி
ஜாஸ்தியாகச்
சொல்லப்பட்டிருக்கிறது.
1160. இரண்டினோ டிரண்டு நூறு தலந்தொறுங் குறைந்து சென்னி
யிரண்டினோ டிரண்டு நூறாந் தொகையொரு கோடி நாற்பத்
திரண்டிலக் கங்க ணாற்பத் தோராயிர மிவற்றி னோடு
வரண்டகப் பதாகை நூற்று நாற்பத்து நான்கு மாமே. (இ-ள்.)
(இப்போது முதனிலையில் சொன்ன
வரண்டகத்
தொகையானது), தலந்தொறும் - மேல்
மேல் நிலைகடோறும்,
இரண்டினோடிரண்டு
|