546மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

நான்கு     மஹா      திக்கு     வீதிகளிலும்,     செம்பொன் -
சிவந்தபொன்னாலாகிய,      வாய்தல்கள்      -     வாசற்படிகள்,
காவதமிரண்டுயர்ந்த -  இரண்டு  காதம்  உன்னதமாகியன,   காதம்
அகன்ற -  ஒரு  காதம்  அகலத்தையுடையன,  கதவம்  - கதவுகள்,
மூவுலகத்தின் -   இந்த   மூன்று   லோகத்தில்   உள்ள,  நல்ல -
நன்மையாகிய,    மணி    -    இரத்தினத்தினாலும்,    முத்தின் -
முத்துக்களினாலும்,  வைரத்து  -  வஜ்ர ரத்தினத்தினாலும்,  ஆய -
ஆகிய,  காவலர்  முடிகள்போலும் -  அரசர்களது  கிரீடம்போலும்,
குடுமிய - சிகரங்களையுடையனவாகும், எ-று. (115)

 1163. கதவுகால் கந்தப் பட்டிக் கம்புகள் வயிரம் நானா
     விதமணி பயின்ற பத்தி யாயிரத் தகத்து பைம்பொ
     னிலதைவல் லிகளி னுள்ளா லிருந்தபத் திரிகண் முத்தின்
     கதலிகைக் கம்பி னம்பொற் கமலங்கள் செறிந்த வற்றுள்.

   (இ-ள்.)     கதவு  -    அக்கதவுகளில்,  கால்  -  நெடுக்குச்
சட்டங்களும்,  கந்தப்பட்டி  -  குறுக்குச்  சட்டங்களும்,  கம்புகள் -
ஆணிகளும்,  வயிரம்  -  வஜ்ர  ரத்தினங்களாம்,  நானாவிதமணி -
பலவித   ரத்தினங்களினால்,  பயின்ற  -  செய்திராநின்ற,   பத்தி -
பந்திகள், ஆயிரத்து -  ஆயிரத்தின், அகத்து - நடுவில், பைம்பொன்
-  பசுமைபொருந்திய   பொன்னாலாகிய,  இலதை  -  கொடிகளும்,
வல்லிகள் - கோற்கொடிகளும், உள் - இவைகளினுள்ளே , இருந்த -
இருந்தன,  பத்திரிகள்  - இலைகளும், முத்தின் - முத்துக்களாலாகிய,
சதலிகை   -  கொடியும்,  (உடைய),  கம்பின்  -   (குறுக்குச்சட்டம்
நெடுக்குச்சட்டங்கள்  சேர்ந்த  சந்திப்புக்களில்  உள்ள) ஆணிகளில்,
அம் - அழகிய,  பொன் - பொன்னாலாகிய, கமலங்கள் - தாமரைக்
கமலங்கள்,  செறிந்து  -  சேர்ந்து,   அவற்றுள்  -   அத்தாமரைக்
கமலங்களில், எ-று.

          இதுவும் அடுத்த செய்யுளும் குளகம். (116)

 1164. மருவிய மரக தத்தின் கொட்டைகள் வண்டு மட்டைப்
     பருகுவ போலும் பைம்பொற் கிம்புரி யிருந்த பாங்கிற்
     றிருமுதன் மங்க லங்கட் செறிந்தன சதங்கை மாலை
    அரவமு மனங்கன் வில்லு மாயிடைப் பரந்த மாதோ.

     (இ-ள்.)   மருவிய - சேர்ந்திராநின்ற,  மரகதத்தின் - பச்சை
ரத்தினத்தினாலாகிய, கொட்டைகள் - திரட்சிபெற்ற குமிழ்கள், வண்டு
- பச்சைநிறமுள்ள  வண்டானது,   மட்டை  -    தாமரைமலரிலுள்ள
மதுவை,  பருகுவபோலும்   -    கிரகிப்பதற்குச்      சமானமாகும்,
பைம்பொற்கிம்புரி - பசுமை பொருந்திய பொன்னாலாகிய பூண்களும்,
இருந்த  -   பொருந்தியிருந்தன,  பாங்கின்  -  வரிசையாகிய  முன்
சொன்ன   பந்திகளில்,    திருமுதல்   -   லக்ஷ்மிதேவி  முதலாக,
மங்கலங்கள்      -        மங்கலங்களாகிய      ரூபங்களுடனே
அஷ்டமங்கலங்களும், செறிந்தன - சேர்ந்திருந்தன