சமவசரணச்சருக்கம்547


Meru Mandirapuranam

சதங்கை  -    சிறுமணிச்     சதங்கைகளுடையவும்,     மாலை -
மாலைகளினுடையவும், அரவமும்  - சப்தமும், அனங்கன் வில்லும் -
மன்மதனுடைய வில்வடிவமும், ஆயிடை - அவ்விடத்தில் (அதாவது :
அக்கதவுகளுடைய         பந்திகளிலும்           சட்டங்களிலும்
சட்டப்பொருத்துகளிலும்), பரந்த - பரவியிருந்தன, எ-று. (117)

1165. புளகமும் பிறையுஞ் கம்பி னீலத்தின் சவியும் பொற்றா
      ரளகமு நுதலு நல்லார் வதனமு மனைய மொட்டின்
      றளையவிழ் தாம முத்தின் றாமங்கள் வயிரத் தாம
      மிளவெயின் விரிபொற் றாம மின்மணித் தாம மின்ன.

   (இ-ள்.)   புளகமும்     - (அந்தக்     கதவுகளின்    சட்டப்
பொருத்துக்களில்   உள்ள,   குமிழ்களின்   கீழ்  சூர்யன்   போல
வட்டமாகிப்   பிரகாசிக்கும்)  கண்ணாடியும்,  பிறையும்  -  சந்திரப்
பிரபை போன்ற கண்ணாடியும்,  கம்பின் -  அந்தக் குமிழின் ஆணி
முனையிலிராநின்ற,   நீலத்தின்   சவியும்  -  பச்சை  ரத்தினத்தின்
காந்தியும்,  (ஆகிய   இவைகள்),   நல்லார்  -  ஸ்திரீமார்களுடைய,
பொற்றாரளகமும் -  அழகிய   மாலையணிந்த   அளகபாரத்தையும்,
நுதலும் -   நெற்றியையும்,  வதனமும் -  முகத்தையும்,  அனைய -
நிகர்த்தனவாம், (அதாவது :  நீலரத்தின காந்தி கூந்தலையும், சந்திரப்
பிரபைக்  கண்ணாடி  நெற்றியையும்,  சூரியன்  போன்ற   விருத்தக்
கண்ணாடி    முகத்தையும்     நிகர்க்கும்),   (இன்னுமக்கதவுகளில்,
மொட்டின்றளையவிழ்தாமம் -  மொக்குகள்  முறுக்கவிழ்ந்து மலர்ந்த
பூந்தாமங்களும்,  முத்தின்  தாமங்கள் - முத்து மாலைகளும், வயிரத்
தாமம் - வஜ்ர  ரத்தின  மாலைகளும்,   இளவெயில்  - இளவெயில்
போன்ற பிரகாசம்,  விரி -  பரவியிருக்கின்ற,  பொற்றாமம் - பொன்
மாலைகளும், மின் - பிரகாசம் பொருந்திய, மணித்தாமம் - இரத்தின
மாலகளும், மின்ன - பிரகாசிக்க, எ-று. (118)

 1166. வம்புகொண் டெழுந்து சூழ்ந்த மணியொளி பரந்த வாய்த
     றம்புடை யிருந்து யர்ந்த தமனிய பீடத் துச்சிக்
     கும்பங்க ளிருந்த வற்றிற் றூபங்கள் கோட்ப டாதே
     யம்பரத் தெழுந்து திக்கைப் பரிமள மாக்கு நின்றே.

   (இ-ள்.)   வம்புகொண்டு -     புதுமையாகக்    கிரணங்களைக்
கொண்டு, எழுந்து -  எழும்பி,  சூழ்ந்த - வியாபித்த, மணியொளி -
இரத்தினங்களின்  ஜோதியானது;  பரந்த  -  விசாலித்த,  வாய்தல் -
இப்போது   சொன்ன    வாசற்படியினுடைய,  புடை  -  ஸமீபமாக
அப்பியந்தரத்தில், இருந்து -  இருக்கப்பெற்றதாகி,  உயர்ந்த - தக்க
உன்னதமுடைய, தமனியபீடத்து - ஸ்வர்ணபீடத்தின், உச்சி - மேலே,
கும்பங்கள் - தூபகலசங்கள், இருந்து இரா நின்றனவாகி, அவற்றில் -
அவைகளில்,      தூபங்கள் -  தூபங்களானவை,   கோட்படாது -
குறைவுபடாமல், அம்பரத்து -