இவ்வளையபூமியானது பதினைந்து
குரோசம் என்றதனால் ஒருபக்க
விஸ்தீர்ணம் இதன் பாதியாகிய ஏழரைக்குரோசம்
இரண்டு பக்கமும்
சேர்ந்தால் பதினைந்து குரோசமாம் (அதாவது
: மூன்றேமுக்கால்
காதம்). ஒவ்வொரு பக்கத்திலும் முன்சொன்ன
நாலுகாதம் உயர்ந்த
ஸ்ரீநிலய கோயிலின் சுற்றுச் சுவரிலிருந்து ஏழரைக்குரோசம் (அதாவது
: ஒன்றே முக்காலே அரைக்கால்
காதம்) விஸ்தீர்ணமாகும்.
வீதிவழிபோக மற்ற கோணங்கள் ஒவ்வொன்றிலும்
இரண்டு சுவராக
எட்டோடு வீதிக்கு இருபக்கத்திலுமுள்ள சுவரைச் சேர்க்கச் சுவர்கள்
மொத்தம் பதினாறாம். சதுர்மஹா வீதிகளில்
தூபகலச மேடையும்
நவஸ்தூபைகளும் பத்துத்
தோரணங்களும் பலிபீடங்களு
மிருக்கின்றன. சதுஷ்கோணங்களிலும் ஒரு கோணத்துக்கு
மூன்று
நிலங்களாக மொத்தம் பன்னிரண்டு
நிலங்களாகும். த்வாதச
கணங்களின் பெயர் விவரங்களை இன்னும் பின்னால்
சொல்லுகின்றார். (121)
1169. விக்கிர மங்கண் மூன்றாய் விரியும்வீ
ரியன்றன் கோயிற்
சக்கர பீடங் காத மிரண்டகன்
றுயர்வு கோமான்
றக்கதன் னளவ தாய்ப்பொன் மணிமய மாகி
நானாப்
பக்கமு மேற லாகும் படிபதி னாற தாமே.
(இ-ள்.)
விக்கிரமங்கள் -
ஆத்ம ஸ்வபாவ
குணபராக்கிரமங்கள், மூன்றாய் - மூன்றாகி,
விரியும் - பரவும்,
(அதாவது: அதனாலேயே பரம்பி அறிந்தும், கண்டும்,
ஸ்வயம்புவாகி
ஸ்வசாரித்திரத்தில் நிற்கும் அனந்தோத்ஸாஹம், அனந்தலகுத்துவம்,
அனந்த விசித்திரம் என்கிற தன்மைகளையடையும்), வீரியன்தன் -
அனந்த வீரியனாகிய ஜினேந்திரனுடைய,
கோயில் - இந்த ஸ்ரீ
நிலயமென்னும் ஆலயத்தில்,
(கோஷ்ட பூமிக்கும்
அப்பியந்தரத்திலிராநின்ற),
சக்கரபீடம் -
தர்ம
சக்கரமிருக்கும்படியான சக்கர
பீடமானது, காதமிரண்டகன்று -
இரண்டு காத விஸ்தீர்ணமாகி, உயர்வு - உன்னதமானது, கோமான்
தக்க தன்னளவதாய் - ஜினேந்திரனுயரத்திற்குத் தகுந்த பிரமாணமாகி,
நானாபக்கமும் - நாலு வீதிப்பக்கத்திலும்,
ஏறலாகும் -
ஏறும்படியாகிய, படி ஸோபானங்களானவை, பொன்மணி மயமாகி -
பொன் இரத்தினங்களின் மயமாகி,
பதினாறதாம் - பதினாறாகும்,
எ-று. (122)
1170. உரைசெய்த பீடத் தும்பர் வலங்கொண்மண் டலமோர் கோசத்
தரைநல்ல வரண்ட கத்த ததைகத் தளவ தேயாய்
|