550மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

  விரைமலர் மாரி மேலா முகத்தவாய் விழுந்த போதின்
  றரையின தகத்து நான்கு சதுமுசப் பூத மாமே.

   (இ-ள்.)    உரைசெய்த - இப்போது  சொல்லப்பட்ட, பீடத்து -
பிரதமபீடமாகிய சக்கர பீடத்தினுடைய, உம்பர் - மேலே, வலங்கொள்
மண்டலம் - (பவ்விய  ஜீவன்கள்  ஏறி)  பிரதக்ஷிணம் வரும்படியான
இடமானது, ஓர் கோசத்து - ஓர்  குரோசம்  அகலமாகி யிராநின்றது,
அரைநல்ல  வரண்டகத்த  -  இன்னும்  அப்பீடத்தில் நன்மையாகிப்
பேர்பாதியாகிய        வரண்டகக்          கொடிகளினிடமானது,
தனதகத்தளவதேயாய்  -  அந்த  இடத்திற்குத்  தக்க  லக்ஷணமான
உத்ஸேத   பிரமாணங்களை     யுடையதாகியும்,  (அதுவல்லாமலும்
அப்பீடத்தில்),     மேலாமுகத்தவாய்  -    ஆகாசமுகத்தினின்றும்
தேவர்களால் சொரியப்பட்ட, விரை - வாசனை பொருந்திய, மலர்மாரி
- புஷ்பவருஷங்களினால், விழுந்த - விழுந்து கிடக்கின்ற, போதின் -
புஷ்பங்களால்   நிறைந்த,   தரையின  தகத்து  -  அப்பீடபூமியின்
மத்தியில், சதுமுகப்பூதம் -  சதுர்முகத்தையுடைய பூதங்கள், நான்கு -
நான்கு  மஹாவீதிகளின்  நேராக  வீதிக்கொன்றாக  நாலு  சதுர்முக
பூதங்கள், ஆம் - ஆகும், எ-று. (123)

 1171. சக்கரன் சாபம் போலத் தனுவில்லை யுமிழச் சென்னி
     மிக்கமா மணிசெ யாரம் விளங்குமா யிரத்த தாகித்
     திக்குலாம் பொழுது காத நான்கதாய்ச் செறிந்தி ருந்தால்
     விற்கண்மூன் றாய றப்பே ராழிதான் விளங்கு நின்றே.

    (இ-ள்.)   வானவர்கோன் -   சக்கரன் -   தேவேந்திரனுடைய,
சாபம்போல - வில்லாகிய  இந்திரதனுஸுவைப் போல, தனு - அந்தச்
சதுர்முகப் பூதத்தினுடைய சரீரமானது,  வில்லை - கிரணத்தை, உமிழ
- சொரிய, சென்னி - சிரசில், மிக்க -  மிகுதியாகிய,  மா - பெருமை
பொருந்திய, மணி - இரத்தினங்களால், செய் -  செய்யப்பட்ட, ஆரம்
- ஹாரங்களானவை,   ஆயிரத்ததாகி -  ஆயிரங்களை யுடையதாகி,
விளங்கும்  -   பிரகாசிக்கப்பெற்றதாகும்,     திக்குலாம்பொழுது  -
ஸ்ரீவிஹாரமாகின்றபோது,    காதநான்கதாய்   -  நாலு   காதமாகி,
செறிந்திருந்தால்  -  ஸமவஸரணத்தை   யடைந்திருந்தால்,  விற்கண்
மூன்றாய் - மூன்று வில்  பிரமாணமாகி,  அறப்பேராழிதான்  - தர்ம
சக்கரமானது,  நின்று  -  தரிக்கப்பெற்றதாகி  நின்று,  விளங்கும் -
பிரகாசிக்கும், எ-று. (124)

  1172. முன்னைப்பீ டத்தின் பாதங் குறைந்தகன் றுயர்ந்த வாறே
       யன்னமு மயிலு மில்லா வக்கொடி பீடந் தன்மேற்
       சொன்னவா றுயர்ந்திட் டைந்து கோசமாந் தலத்தின்மீது
       மன்னிய கந்தகுடியின் மண்டபங் காத மாமே.