சமவசரணச்சருக்கம்551


Meru Mandirapuranam
 

    (இ-ள்.) முன்னைப் பீடத்தில் - முன்சொன்ன  பிரதம பீடத்தில்,
பாதங்குறைந்து  -  நாலத்தொன்று  குறைந்து, அகன்று - ஒன்றரைக்
காதம்   அகலத்தையுடையதாகி,   அவ்வாறே   யுயர்ந்து   -  முன்
பீடமுயர்ந்தது   போல   யோக்கியோத்ஸேதமாகி,    அன்னமும் -
ஹம்ஸமும்,  மயிலும்  -  மயில்ரூபமும்,  இல்லா -   இல்லாததாகிய,
அக்கொடிபீடந்      தன்மேல்     -     (மற்ற       அஷ்டவித
த்வஜக்கொடிகளையோக்கியப்      பிரமாணமாகவுடைய)     அந்த
த்வஜபீடத்தின்   மேல்,  சொன்னவாறு  -  முன்சொன்ன  விதமாக,
உயர்ந்திட்டு -  உயர்ந்ததாகி,  ஐந்து  கோசமாம் - ஒன்றேகால் காத
விஸ்தீர்ணமாகிய, தலத்தின்மீது - திரிதீய பீடத்தின்மேலே, மன்னிய -
சேர்ந்திராநின்ற,   கந்தகுடியின்   மண்டபம்   -   நிர்க்கந்தனாகிய
ஜினேந்திரனிருக்கும்படியான  கந்தகுடி  மண்டபமானது,  காதமாம் -
ஒருகாதவகலமுடையதாகி  யிராநின்றது, எ-று. (125)

   இதோடு ஸமவஸரண பூமியின் அளவுகள் பன்னிரண்டு யோஜனை
மொத்தத்திற்குச் சரியாய் விட்டதை அறிந்துகொள்க.

 1173. வான்பளிங் காலி யன்று நாலைந்து வில்லு யர்ந்த
      நான்குதம் பங்க ளேந்த நவமணி மாலை வாயிற்
      சூழ்ந்தத னடுவெண் முத்த மாலைகள் பத்து வில்லுத்
      தாழ்ந்துசெம் முகிலி னின்றுந் தாரைவந் திழிவ போன்ற.

   (இ-ள்.)     (அந்தமண்டபம்),   வான்   -    வெள்ளையாகிப்
பரிசுத்தமாகிய,    பளிங்கால்   -   ஸ்படிகத்தினால்,    இயன்று -
செய்யப்பட்டு,   நாலைந்து    வில்லுயர்ந்த  -   (ஜினேந்திரனுடைய
உன்னதத்துக்குமேல்) இருபதுவில் உன்னதமாகிய, நான்குதம்பங்கள் -
நாலு ஸ்தம்பங்கள்,  ஏந்த  -  தாங்க,  வாயில்  - அம்மண்டபத்தின்
நாலுபக்கமும் விளிம்புகளில்  மேலே, நவமணிமாலை  -  ஒன்பதுவித
இரத்தினங்களினாலும்  ஆகிய  மாலைகள்,  சூழ்ந்த  -  சூழப்பட்டு,
அதன்நடு   -   அம்மண்டபத்தின்   நடுவில்   உள்ளே,  வெண் -
வெளுப்பாகிய,        முத்தமாலைகள்    -      முத்துமாலைகள்,
பத்துவில்லுத்தாழ்ந்து  -  மேனின்று  பத்துவில்லு  தாழ்ந்து தொங்கி,
செம் -  சிவந்த,   முகிலினின்றும்  -  மேகத்தினின்றும்,   தாரை -
மழைத்தாரைகள்,   வந்திழிவபோன்ற - வந்திறங்குவதற்கு ஒப்பாயின,
எ-று. (126)

 1174. மூன்றுவில் லுயர்ந்த கன்ற முழுமணிப் பீடஞ் சீய
     மேன்றுமே லெழுவ போல விருந்தன வேந்தப் பட்ட
     தான்றபொன் னணையு மம்பொன் விசியுநுண் டுகிலு மேவித்
     தோன்றுமண் டபத்தி னுள்ளாற் சுடருமிழ்ந் திரவி போன்ற.

   (இ-ள்.)  மண்டபத்தின் -  இப்போது  சொன்ன  மண்டபத்தின்,
உள் -   நடுவிலே,  மூன்றுவில்லுயர்ந்து  -  மூன்றுவில்லுன்னதமாகி,
அகன்று - யோக்கியப்