552மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

பிரமாண  வகலத்தை  யுடையதாகி, அம்  -   அழகிய, முழுமணி -
முதிர்ச்சிபெற்ற இரத்தினத்தினாலாகிய, பீடம் - பீடத்தை, ஏந்தப்பட்ட
- தரிக்கப்பட்ட,   சீயம்  -  சிம்மங்கள்,  ஏன்று    -   பொருந்தி,
மேலெழுவபோல   -  மேலெழும்பிச்  செல்வனபோல,  இருந்தன -
இராநின்றன, (அந்த  ஸிம்ம  பீடத்தின்மேலே), ஆன்ற - பெரிதாகிய,
பொன்னணையும் -  பொன்னாலாகிய  மெத்தையும், அம் - அழகிய,
பொன் - பொன்னாலாகிய, விசியும் - கட்டும்,  (அதாவது : திண்டும்),
நுண் -   மெல்லிதாகிய,   துகிலும் -  பட்டு  வஸ்திரமும்,  மேவி -
பொருந்தி,    தோன்றும்   -    தோன்றுகின்ற,     சுடருமிழ்ந்து -
பிரகாசத்தைவீசி,   (ஜினேந்திரனாகிய பகவான் அமர்ந்திருக்க) இரவி
போன்ற - சூர்யப்பிரகாசத்தை நிகர்த்துப் பிரகாசித்தன, எ-று. (127)

 1175. வில்லரை யகன்று யர்ந்த விழுமணிப் பீட மேய
     வெல்லைநின் றிரும ருங்கு மியக்கர்சா மரையி யக்க
     நல்லெழிற் பீட மேவி நாகவிந் திரரு நானா
     வில்லுமிழ்ந் திலங்குந் தோண்மேல் விளங்குசா மரைய ரானார்.

   (இ-ள்.)     வில்லரையகன்றுயர்ந்த   -      அரைவில்லகன்று
அரைவில்லுயர்ந் திராநின்ற, விழுமணிப்பீடம் - பெருமை பொருந்திய
ரத்தினத்தாலாகிய  பீடங்களானவை,  மேய  -  (நாலு   திசையிலும்
பகவானுடைய  பீடத்தின்  இரண்டு  பக்கங்களிலும்)  பொருந்தியிரா
நின்றன, எல்லை  நின்று - (அந்தப்  பீடத்துக்கு இப்பால்) மெட்டாக
நின்று,   இருமருங்கும் -  இரண்டு   பக்கங்களிலும்,    இயக்கர் -
யக்ஷதேவர்கள்,  சாமரை - வெண்சாமரைகளை, இயக்க - வீச, நல் -
நன்மையாகிய, எழில் - அழகையுடைய, பீடம் - இப்போது சொன்ன
பீடங்களில்,     மேவி    -     பொருந்தி,      நாகவிந்திரரும் -
பவணேந்திரர்களும்,    நானாவில்லுமிழ்ந்து   -   பல    விதமான
கிரணங்களைச்    சொரிந்து,      இலங்கும்   -    விளங்குகின்ற,
(ஆபரணங்களை யணிந்த), தோள்மேல் - தங்கள் தோள்களின்மேல்,
(வைத்து   வீசாநின்ற),   விளங்கும்   -   பிரகாசம்    பொருந்திய,
சாமரையரானார் -   வெண்   சாமரைகளை  யுடையவர்களானார்கள்,
எ-று. (128)

 1176. தாமரைத் தடத்தெ ழுந்து பொன்மலை தன்னைச் சூழ்ந்த
     காமரு கன்னி யன்னக் குழாத்தினின் னான்கி லாத
     சாமரைத் தொகுதி நான்கு பத்துநூ றாயி ரந்தான்
     சோமரை வென்ற மூன்று குடையினான் புடைய வாமே.

   (இ-ள்.)    தாமரைத்தடத்து  -   தாமரைத்  தடாகத்தினின்றும்,
எழுந்து -  எழும்பி,  பொன்மலைதன்னை - மஹம்மேரு பர்வதத்தை,
சூழ்ந்த - சூழ்ந்துகொண்ட - காமரு - வாஞ்சிக்கும்படியான, கன்னி -
இளமையாகிய,       அன்னக்       குழாத்தினின்   -    ஹம்ஸ
கூட்டங்களைப்போல, (வெளுப்பாகிய), சாமரைத்தொகுதி - சாமரைக்
கூட்