சமவசரணச்சருக்கம்553


Meru Mandirapuranam
 

டங்கள்,   நான்கிலாத - நாலு குறைந்த, நான்கு பத்து நூறாயிரந்தான்
- நாற்பது   லட்சமாம்,   சோமரை   -    சந்திரனை,    வென்ற -
ஜெயித்திராநின்ற,  மூன்று  குடையினாம்  - சத்திரத்திரயத்தையுடைய
ஜினேந்திரனுடைய,  புடைய  -  நாலு  பக்கங்களிலும் உள்ளனவாய்,
ஆம் - ஆகும், எ-று. (129)

1177. கருத்தினா லன்றி வானோர் கரத்தினாற் கண்ட தன்றி
     யுரைத்தமண் டபத்தி னும்ப ருலகொரு மூன்று போல
     நிரைத்தமுந் நிலத்த தாயெண் ணைந்துவில் லோங்கி யோக்கத்
     தரைத்தலங் கீழ தாகி யரையரை மேல வாகி.

   (இ-ள்.)   வானோர் - தேவர்கள், கருத்தினாலன்றி - மனதினால்
நினைத்து   நிர்மாபணஞ்செய்தார்களே  யல்லாமல்,   கரத்தினால் -
கையினாலே,   கண்டதன்றி  -   செய்ததல்லாமையாகி,  உரைத்த -
இப்போது   சொல்லப்பட்ட,    மண்டபத்தின்   -     ஜினேந்திரன்
அமர்ந்திராநின்ற  கந்தகுடிமண்டபத்தினுடைய,   உம்பர்  -  மேலே,
உலகொரு மூன்றுபோல - இந்த ஒப்பற்ற மூன்று  லோகத்தைப்போல,
நிரைத்த     -     (ஒன்றின்மேலொன்முன்)  வரிசைபெற்றிராநின்ற,
முந்நிலத்தாய்  -  மூன்று    நிலைகளையுடையதாகி,   எண்ணைந்து
வில்லோங்கி -  மொத்தம்  நாற்பது  வில்லுன்னதமாகி,   ஒக்கத்து -
அந்த உன்னதத்தில்,  அரைத்தலம் - பாதியாகிய இருபது வில்லிடம்,
கீழதாகி -  அடி  நிலையாகி, அரையரை - அதன் பாதியாகிய பத்து
பத்து   வில்லு,   மேலவாகி -   மேல்   இரண்டு  நிலைகளுக்கும்
உன்னதமாகி எ-று.

           இதுவும் அடுத்த செய்யுளும் குளகம். (130)

 1178. படிகளின் பந்தி வாய்தல் பரமன துருவ மங்கங்
     குடையமுந் நிலங்கண் மும்மை யுலகினுக் கிறைமை யோதி
     யிடையிருந் திறைவன் கோயிற் கிறைமைகொண் டிருந்த துள்ளார்
     கடையிலா வறிவன் கந்த குடியமா ளிகையி தாமே.

   (இ-ள்.) படிகளின் -  படிகளினது,  பந்தி - வரிசைகளையுடைய,
வாய்தல் -  வாய்தல்கள் (நிலைக்கு நிலையுள்ளனவாகி), அங்கங்கு -
ஆங்காங்கே  நிலைக்கு நிலை, பரமனதுருவம் - ஜினேந்திரரூபமாகிய
ஜினபிம்பங்களை,  உடைய -  உடைத்தாகிய, முந்நிலங்கள் - மூன்று
நிலங்கள், மும்மை யுலகினுக்கு -  மூன்று லோகத்திற்கும், இறைமை -
நாதனாகுந்தன்மையை,   ஓதி  -  தெரியப்பண்ண,   இடையிருந்து -
ஸமவஸரணத்தின்     மத்தியிலிருந்து,   இறைவன்    கோயிற்கு  -
ஜினேந்திரனுடைய  ஆலயத்துக்கு,  இறைமை  கொண்டு - முதன்மை
பெற்று,  இருந்தது -  (அம்மண்டபம்)  இராநின்றது,  உள் - உள்ளே
ஆர் - நிறைந்திராநின்ற,  கடையிலா  -  முடிவில்லாத,  (அதாவது :
அனந்தமாகிய), அறிவன் - கேவல ஞானத்தை