556மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

வணங்கி,   பின்  -  பிற்பாடு,  தனை  -  அப்பிரபா மண்டலத்தை,
கண்டவர் - பார்க்கின்றவர்களுடைய,  பிறவியேழ் - சப்தபவஜாதியை,
காண - பார்க்கும் படியாக, நின்றது - இராநின்றது, எ-று. (136)

 1184. அந்தமி லுவகைய ரான வானவர்
     துந்துபி முழக்கொலி தொடர்ந்த றாதெழ
     வந்துடன் வீழ்ந்தவா னவர்பெய் பூமழை
     பந்தியும் பரவையும் பிறவு மாகவே.

   (இ-ள்.)    அந்தமில்   -    அளவில்லாத,   உவகையரான -
சந்தோஷத்தை  யுடையவர்களான,   வானவர்  -  தேவர்களுடைய,
துந்துபி  -   வாத்தியங்களின்,  முழக்கு  -  கர்ஜனையின்,   ஒலி -
சப்தமானது,  தொடர்ந்து  -  சேர்ந்து,  அறாது - பற்றறாமல், எழ -
வியாபிக்க,  வானவர்  -   மற்றும்  தேவர்கள்,  பெய் - சொரிகின்ற,
பூமழை  -  புஷ்ப   வருஷங்கள்,  பந்தியும்  -   வரிசைகளாகவும்,
பரவையும் -   விசாலமாகவும்,   பிறவும்  ஆக  - இன்னும் அனேக
விசித்திரங்களாகவும் ஆக,  வந்து  - வந்து, உடன் - உடனுக்குடன்,
வீழ்ந்த - வீழ்ந்தன, எ-று. (137)

வேறு.

 1185. மாதவர் துறக்க மாதர் மாதவம் புரியு மாதர்
     சோதிடர் வான வந்தரர் பவணர்தந் தோகை யன்னார்
     மேதகு பவணர் வான வந்தரர் விளங்குந் தேவர்
     சோதம னாதி வானோர் மன்னர்சொல் லறிவி லங்காம்.

   (இ-ள்.) மாதவர் - கணதராதி மஹாமுனிவரர்களும், துறக்கமாதர்
- கல்பவாஸி    தேவஸ்த்ரீயர்களும்,   மாதவம்புரியும்    மாதர்  -
தபஞ்செய்து நோற்கின்ற ஆர்யாங்கனைகளும், சோதிடர்வான வந்தரர்
பவணர் தம் தோகையன்னார் - ஜோதிஷ்க தேவஸ்த்ரீகளும் வியந்தர
தேவஸ்த்ரீகளும்          பவணதேவஸ்த்ரீகளும்,      மேதகு   -
மேன்மையிற்றகுந்த,   பவணர்  - பவணதேவர்களும், வானவந்தரர் -
வியந்தரதேவர்களும்,  விளங்குந்தேவர்  -   ஜோதிஷ்கதேவர்களும்,
சோதமனாதிவானோர்   -  ஸௌதர்மாதிகல்பவாஸி    தேவர்களும்,
மன்னர் - அரசராதியரும், சொல்லறிவிலங்கு - தர்மவசனத்தையறியும்
சக்தியுள்ள (அதாவது : மனோபலமுள்ள) திரியக்ஜீவன்களும், ஆம் -
இப்படி வரிசையாக த்வாதசகணங்கள் கோஷ்டபூமியிலாகும், எ-று. (138)

 1186. பன்னிரு கணமுஞ் சூழப் பருதியி னடுவணுச்சி
     மன்னிய வருக்க னொத்தும் மந்தர முலக மூன்றின்