சமவசரணச்சருக்கம்557


Meru Mandirapuranam
 

    தன்னடு விருந்த தொத்தும் தாரகை நடுவட் சோம
    னென்னவு மிருந்த கோமான் றன்னிடங் குறுகி னாரே.

   (இ-ள்.)   பன்னிருகணமும்   -   இப்போது    சொல்லப்பட்ட
த்வாதசகணங்களும்,  சூழ  -  சொன்ன  முறையே   பிரதக்ஷணமாக
வரிசையிற்   சேர்ந்து   தன்னைச்   சூழ்ந்திருக்க,     பருதியின்  -
பரிவேஷ்டத்தினுடைய,  நடுவண்  -   மத்தியில்,  உச்சி - உச்சியை,
(அதாவது  :  உயரத்திலே),      மன்னிய   -     சேர்ந்திராநின்ற,
அருக்கனொத்தும்    -  சூரியனுக்குச்  சமானமாகியும்,    மந்தரம் -
மஹம்மேருபர்வதமானது, உலக மூன்றின் - மூன்று லோகத்தினுடைய,
தன்னடுவிருந்த   தொத்தும்  -  நடுவிலேயிருந்ததற்  கொப்பாகவும்,
தாரகை நடுவண் - தாராகணங்களினது மத்தியில்,  சோமனென்னவும்
- சந்திரனைப்  போலவும்,  இருந்த -  (ஸமவஸரணத்தில் லக்ஷ்மீவர
மண்டபத்தில் த்ரிதீய பீடத்தின்  மேலுள்ள  கந்தகுடி  மாளிகையின்
நடுவிலுள்ள சிம்ம பீடத்தின் மேல்) இராநின்ற, கோமான் தன்னிடம் -
ஜினேந்திரனுடைய ஸ்ரீ   நிலயமெனும்  உள்ளிடத்தை,  குறுகினார் -
(மேரு மந்தரரென்னும் இருவர்களும்) அடைந்தார்கள், எ-று. (139)

 1187.மேருவைச் சூழவோடும் விரிகதி ரிரண்டுபோல
    வூர்கொண்மண்டலத்தையொக்கும் வலங்கொண்மண்டலத்தி
                                         னுள்ளான்
    மாரிபோன் மலர்சொ ரிந்து வலங்கொண்டு பணிந்து புக்கார்
    தோரணங் கடந்த போழ்திற் றுறவினுக் கிறைவன் றோன்ற.

    (இ-ள்.)   (அவ்வாறடைந்தவர்கள்),   மேருவை  - மஹம்மேரு
பர்வதத்தை, சூழ - சூழ்ந்து,  ஓடும் - செல்லுகின்ற, விரி - விசாலித்த
கிரணங்களையுடைய,        கதிரிரண்டுபோல     -      இரண்டு
சூர்யர்களைப்போல,     ஊர்கொள்   மண்டலத்தை   யொக்கும்  -
பரிவேஷ்டத்திற்குச்  சமானமாகிய,  வலங்கொள்  -  பிரதக்ஷணமாக
வரும்படியான,  மண்டலத்தின்  -      ஸமவஸரண     பூமிகளில்,
வலங்கொண்டு -  பிரதக்ஷணஞ்  செய்துகொண்டு,  மாரிபோல்  மலர்
சொரிந்து -  மழையைப்போல்  மலர்களைச்  சொரிந்து,   பணிந்து -
வணங்கி,  உள்ளால்  -  ஸ்ரீநிலயத்தின்   உள்ளாக,      புக்கார் -
அடைந்தார்கள், தோரணம் -  அந்த ஸ்ரீநிலயத்தில்  வீதியில் உள்ள
ஒன்பது ஸ்தூபைகளையும் பத்துத்  தோரணங்களையும் தாண்டியுள்ள
பலிபீடத்தையும், கடந்தபோழ்தில் - கடந்து போனபோது, துறவினுக்கு
- தபங்களுக்கெல்லாம், இறைவன் -    நாயகனாகிய   ஜினேந்திரன்,
தோன்ற - (இவர்கட்குத்) தெரிய, எ-று.

 1188. கரங்கள்முன் குவிந்த வுள்ளக் கமலங்கள் விரிந்து கண்ணீர்
     சொரிந்தன பரந்த ரோமம் புளகங்க டுடித்த வாய்ச்சொல்
     லரிந்தன சுரந்த காத லடிமுறை யிடுத லோய்ந்த விரிந்தன
     வினைக ளெல்லா மிரவிமுன் னிருளை யொத்தே.