சமவசரணச்சருக்கம்559


Meru Mandirapuranam
 

   (இ-ள்.)  (அவ்வாறு  வாழ்த்தத்  தொடங்கியவர்கள்), காமாதி -
ராகத்வேஷமோஹங்களை,     கடந்ததுவும்     -     ஜெயித்ததும்,
கைவலப்     பெண்ணடைந்தவுதும்   -    கேவலஞ்ஞானமென்னும்
மோட்சலட்சுமியினை  யடைந்ததும்,  பூமாரி  -  புஷ்பவருஷங்களை,
பொழிய -   தேவர்கள்  சொரிய,  கமலப்போதில்  -   செந்தாமரை
புஷ்பத்தின்  மேலே,  எழுந்தருளியதும்  - ஸ்ரீ விஹாரம் செய்வதும்,
பொன்னெயில் - பொன்னாலாகிய  மதில்கள்  சூழ்ந்த, மண்டலத்து -
ஸமவஸரண மண்டலத்திலே,  அசோகம்  -  அசோக விருட்சமானது,
தேம் -  வாசனை  பொருந்திய,  மலர்மாரி  -  புஷ்பவருஷங்களை,
பொழிய  -  சொரிய,   சீயவணை   -   ஸிம்மாஸனத்தின்  மேலே,
அமர்ந்ததுவும்    பொருந்தியிருந்ததும்,    தேவர்      கோமான் -
தேவேந்திரன், தாமாதியணிந்து - மாலை முதலானவைகளை யணிந்து
கொண்டு, பணிந்தெழுந்ததுவும் - வணங்கி  யெழுந்ததும், தத்துவம் -
இந்த ஸ்வரூபம், என்தகவோ - இஃது என்ன  குணமோ?,  என்ன -
என்றும், எ-று. (143)

 1191. ஒருமொழியே பதினெட்டா யுலகறிய
         விளம்பியது மொளிகொண் மூன்றிற்
     றிருமறுவாய்த் திகழ்கின்ற திருமூர்த்தி
         யதனழகுந் தேவ நின்பான்
    மருவினர்க்கு மல்லவர்க்கு மொத்திருந்தும்
         அடைந்தவர்க்கு வார்த்தை நல்கும்
    பெருமயமோ வதிசயமோ பிரானீயே
         மூவுலகோர் பிரான கின்றாய்.

   (இ-ள்.)    ஒரு    மொழியே   -   திவ்யத்துவனி  யொன்றே,
பதினெட்டாய்  -   பதினெட்டு விதமான  பாஷைகளாக, உலகறிய -
லோகத்துள்ள  பவ்விய  ஜீவன்கள்  அறியும்படி,     இயம்பியதும் -
சொல்லியதும்,  ஒளிகொள்  மூன்றில்  -  மனோஜோதி  வாக்ஜோதி
காயஜோதி என்கிற மூன்றிற்  பொருந்தி, திருமறுவாய்த் திகழ்கின்ற -
ஸ்ரீதேவியாதி ஸ்ரீலக்ஷணங்கள்  ஆயிரத்தெட்டுடன்  பிரகாசியாநின்ற,
திருமூர்த்தி  யதனழகும் -  பரமௌதாரிக  திவ்ய   தேகத்தினழகும்,
தேவ -  ஸ்வாமியே!,  நின்பால் -  உம்மிடத்தில்,  மருவினர்க்கும் -
அடைந்தவர்கட்கும், அல்லவர்க்கும் -  சேராதவர்கட்கும், ஒத்திருந்து
- நீ ராக த்வேஷமில்லாமல்  சமத்துவமாயிருந்து,  அடைந்தவர்க்கு -
சேர்ந்தவர்கட்கு,   வார்த்தை  -    தர்மோபதேசத்தை,    நல்கும் -
அளிக்கின்ற,   பெருமயமோ  -   பெரிதாகிய   ஸ்வபாவகுணமோ?,
அதிசயமோ - கர்ம க்ஷயத்தினாலான மிக்க அதிசயமேயாகும், பிரான்
- எப்பொருட்கும் இறைவன், நீயே - நீயேயாகின்றாய், மூவுலகோர் -
இந்த   மூன்று     லோகத்திலுமுள்ள   பவ்விய    ஜீவன்களுக்கு,
பிரானாகின்றாய் - கடவுளாகின்றாய், எ-று. (144)