1192. விலங்கரசன் வலிவிலக்கி
வேர்ப்பொழிந்து
விமலமாய்
வெளிதா யுன்மே
லிலங்குபொறி யாயிரத்தெட்
டிருந்தழகார்ந்
திளநாற்ற
மியல்பா யின்சொற்
புலந்தனக்கின் னமுதாகி
வச்சிரப்பூண்
செறிந்தாணி
யறைந்த யாப்பா
யிலங்குவடி வுடையதிரு
மூர்த்தியியல்
பதிசயனெம்
மிறைவ நீயே.
(இ-ள்.)
விலங்கரசன் வலி விலக்கி - மிருகராஜன் வலி
நீக்கி
(அதாவது : அளவில்லாத மஹா பலம்பெற்று), வேர்ப்பொழிந்து -
சுவேதா பாவமுற்று, விமலமாய் - ரஜோ மலா பாவமாய்,
வெளிதாய்-
க்ஷீரஸமான ரஸ விசேஷமாய், உன் மேல் - உனது
தேகத்தில்,
இலங்கு - விளங்குகின்ற, பொறியாயிரத்தெட்டு - ஆயிரத்தெட்டாகிய
திருமறுவுகள், இருந்து - தங்கி (அதாவது : ஸ்ரீ
தேவியாதி ஸ்ரீ
லட்சணம் அமைந்து), அழகார்ந்து -
உபமாதீத ஸௌந்தரியம்
பொருந்தி, இளநாற்றமியல்பாய் -
பரமமான பரிமள கந்தம்
இயற்கையாய், இன் சொல் -
ஸ்ரீவணப் பிரியமான
வசனப்பிரவர்த்தியும், புலந்தனக்கின்னமுதாய்
- கட்புலனுக்கு
அமுதான, ஸமசதூ ஸ்ரீ ஸம்ஸ்தானமாய், வச்சிரப்
பூண் செறிந்து
ஆணியறைந்தயாப்பாய் - வஜ்ரவ்ரஷபநாராச ஸம்ஹனனமாய்,
இலங்கு
வடிவுடைய - விளங்குகின்ற இந்த ஸ்வரூபங்களை முதலாகவுடைய,
திருமூர்த்தி - பரமௌதாரிக திவ்யதேகத்தையுடையவனும்,
இயல்பின்
அதிசயன் - ஸ்வபாவாதிசய சம்பத்தையுடையவனும், (ஆகிய),
எம்மிறைவன் - எங்கட்கு
ஸ்வாமியாகியவன், நீயே -
நீயேயாகின்றாய். எ-று. (145)
1193. சாயைபசி யிமைப்பொழிந்து சதுமுகமாய்
மயிருகிர்தம் மளவிற் கேற்றுக்
காயமிசை யுலவிநல கலைக்கெல்லா
மிறைவனுமாய்க் கருமக் கேட்டி
னோசனைநா னூறகத்தி னுயிர்க்கழிவு
பசிகளுப சருக்க நீங்கத்
தேசினொடு திளைத்திருந்த திருமூர்த்தி
யதிசயனெஞ் செல்வ னீயே.
(இ-ள்.) சாயை பசியிமைப்பொழிந்து
- அச்சாயத்துவமும்
நிர்புக்தித்துவமும் நிர்னிமேஷத்துவமும்
பெற்று, சது முகமாய் -
சதுரானனத்துவம் அமைந்து, மயிருகிர்தம்மளவிற் கேற்று -
ஸமான
நககேசத்துவமும் பெற்று,
|