சமவசரணச்சருக்கம்561


Meru Mandirapuranam
 

காயமிசை  யுலவி  -   வ்யோமகமனத்துவம்  அடைந்து,  நலகலைக்
கெல்லா  மிறைவனுமாய்  -   ஸர்வவித்தியேசுவரத்துவமும்   பெற்று,
ஓசனை நானூறகத்தின் -  சுற்றுக்கு  நானூறு  யோஜனை  பரியந்தம்,
உயிர்க்கழிவு  பசிகள்  உபசருக்கம்  நீங்க  -  நிர்ஜ்ஜந்துகவதையும்
துர்ப்பிக்ஷ விரஹமும்  நிருப  ஸர்க்கமும்  ஆகி, கருமக்கேட்டின் -
கர்ம க்ஷயத்தினாலாகிய,  தேசினொடு - ஜோதியோடு, திளைத்திருந்த
- சேர்ந்திரா  நின்ற,   திருமூர்த்தி   -   பரமௌதாரிக    திவ்விய
தேகத்தையுடைய,  அதிசயன்  -   இந்த   கர்மக்ஷயாதிசயசம்பத்தை
யுடையவனாகிய, எஞ்செல்வன் -  எமது  பக்திக்கு  கந்த ஸம்பத்தை
யுடையவன், நீயே - நீயேயாகின்றாய், எ-று. (146)

 1194. திருமொழியின் வியத்தகவு மனைத்துயிரின்
            மைத்திரியுந் திக்கா காய
     நிருமலமாய் விளங்குதலெவ் விருதுவும்வந்
           துடனிகழ்த னிலத்துப் பைங்கூழ்ப்
     பெருமையொடு மங்கலங்க ளறவாழி
           பூமாரி நறுங்காற் றம்பொன்
     மரைமலரி னிரைமுதல்வா னவரின்வரு
           மதிசயனெம் மன்ன னீயே.

   (இ-ள்.)   திருமொழியின்     வியத்தகவும்     -       ஸகல
பாஷாஸமன்விதவாக்  பிரவர்த்தியும்,  அனைத்துயிரின்மைத்திரியும் -
ஸர்வஜீவ மித்ரபாவமும்,  திக்காகாயம்  நிருமலமாய்  விளங்குதல் -
ஆகாசதிசா    வைமல்லியமும்,   எவ்விருதுவும்  வந்துடனிகழ்தல் -
ஷட்ருது ஸம்பூர்ண ஸஹப்பிரவர்த்தித் துவமும்,  நிலத்துப் பைங்கூழ்
பெருமை யொடும் - பூதல ஸர்வஸஸ்யாதி ஸம்ருத்தியும், மங்கலங்கள்
- அஷ்டமங்கல ஸமூஹங்களும், அறவாழி - தர்ம சக்ரமும், பூமாரி -
புஷ்ப வருஷமும், நறுங்காற்று -  மந்த மாருத சலனமும், அம்பொன்
மரைமலரின் நிறை - அழகிய  பொன்போன்ற  அரவிந்தபேஸ்ரீணியும்,
முதல் - முதலாக, வானவரின் வரும்  அதிசயன் - தேவர்களாலாகிய
தெய்வீகாதிசய    முடையவனாகிய,    எம்மன்னன்   -    எமக்கு
நாயகனாகியவன், நீயே - நீயேயாகும், எ-று. (147)

 1195. அழுந்துவினைப் பகைப்புறங்கண் டனைத்துலகு
            மலோகமுந்தன் னகத்தி னுங்க
     வெழுந்தறிவின் முகத்தாலெப் பொருளுமுன
            தகத்தடக்கி யிருந்தோய் வந்து
     செழுங்குவடு செறிந்திருந்து முழங்குமெழின்
            முகில்போல விராக மின்றி
     யெழுந்தருளி வந்திருந்தெப் பொருளுமரு
            ளியவெங்க ளிறைவ னீயே.