562மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

அழுந்தும் -  ஆத்மனிடத்தில்  அனாதியாகப்   பதிந்து பந்தித்திரா
நின்ற, வினைப்பகை - காதிகர்மங்களாகிய சத்துருக்களை, புறங்கண்டு
- ஓடச்செய்து, (வென்ற ஜயத்தால்),  அனைத்துலகும் அலோகமும் -
லோகாலோக சமஸ்தங்களையும்,  தன்னகத்தின்  -  தன்னுக்குள்ளே,
நுங்க -  விழுங்க,   எழுந்த -  உண்டாகிய,  அறிவின்முகத்தால் -
கேவலஞானமென்னுங்    குணத்தால்,   எப்பொருளும்  -   லோகா
லோகமாகிய ஜீவாதிஷட் திரவிய குண பரியாயங்களையும், உனதகத்து
- உன்னிடத்திலே,  அடக்கி - ஞானாந்த ஸ்திதமாக்கி, இருந்தோய் -
ஸர்வகதனாகியிருந்த  ஸ்வாமியே!,  வந்து  -  ஆகாயத்தில்  வந்து,
செழுங்குவடு  -  செழுமையாகிய  பர்வதசிகரத்தில், செறிந்திருந்து -
சேர்ந்திருந்து,  முழங்கும்  -   சப்திக்கின்ற,  எழில்  -    பிரகாசம்
பொருந்திய,   முகில்போல் -    மேகத்தைப்போல்,  விராகமின்றி -
வெறுப்பில்லாமல், எழுந்தருளி வந்து - ஸ்ரீவிஹாரமாகி வந்து, இருந்து
- ஸமவஸரணத்தில்  த்ரீதீய  பீடத்தில்  சிம்மாசனத்தின் மேலிருந்து,
எப்பொருளும் -  ஸகல  பதார்த்த  ஸ்வரூபங்களையும்,  அருளிய -
திவ்யத்வனியால்   கூறியருளியவனாகிய,   எங்கள்   இறைவனீயே -
எங்களுக்கு நாதன் நீயே யாகின்றாய், எ-று.

   ‘எழுந்த அறிவின்? என்பது, ‘எழுந்தறிவின்? எனத்தொகுத்தலாயிற்று. (148)

 1196. செங்கமலத் துலவுமுன்றன் றிருந்தடியை
            நினைத்திடவே சித்தி யென்னு
     மங்கனைவந் தவரையடைந் திடவதன்மேற்
            கொடையின்றா யருளு நீங்கி
     வெங்கதங்கொண் டுனையடையா தொழிந்தவர்க
            ணெடுந்துயரின் வீழக் காணா
     வங்கவர்மே லருள்புரிவு முனிவுமகன்
            றிருந்தனையெம் மிறைவ னீயே.

   (இ-ள்.)   செங்கமலத்து  -   செந்தாமரை  புஷ்பத்தின் மேலே,
உலவும் - ஸ்ரீ விஹாரமாகின்ற, உன்தன் - உன்னுடைய, திருந்தடியை
- செவ்விதாகிய பாதங்களை, நினைந்திட - எண்ணி ஸ்வரூப மறிந்து
பக்தி செய்ய, அவரை - அப்படிப்பக்தி செய்தவர்களை, சித்தியெனும்
- மோக்ஷமென்று சொல்லும்,  அங்கனை -   லக்ஷ்மி,  அடைந்திட -
சேர,   அதன்மேல்   கொடையின்றாய்  -  அதற்குமேல்  அவர்க்கு
யாதொரு    கொடையும்      இல்லாததாக,   (அப்படிக்கில்லாமல்),
அருளுநீங்கி - ஜீவதயவும்  இன்றி, வெங்கதங்கொண்டு - மிகுதியான
குரோத பரிணாமமுற்று,   உனையடையாது  -  உனது ஸ்வரூபமறிந்து
உன்னைச்  சேராமல்,  ஒழிந்தவர்கள் -  நீங்கினவர்கள்,   நெடும் -
பெரிதாகிய,  துயரின் -   துக்கத்திலே,  வீழ -  வீழ்ந்து  தவிப்பதை,
காணா - அறிந்து,  அங்கவர்மேல்  அருள்புரிவும்  -  அவ்விடத்தே
பக்திசெய்து   உம்மைச்  சேர்ந்தவர்கள்பேரில்  தயவும்,  முனிவும் -
சேராத