வர்கள்பேரில் கோபமும்,
அகன்று - நீங்கி,
இருந்தனை -
அவரவர்களின் தன்மையென்று
ஸமத்துவீபாவமாக வீதராக
சுத்தோபயோகமாய் இராநின்றாய், (ஆகையால்), எம்மிறைவனீயே -
எங்களுக்கிறைவன் நீயேயாகும், எ-று.
(149)
1197. பொதுவகையாற் பொருளெல்லா மொன்றேயென்
றருள்செய்தப் பொதுவ லாத
விதிவகையாற் பொருளெல்லாம் வேறேயென்
றவ்விரண்டு மொன்றே யென்றும்
பொதுவிரிவு பொருணிகழ்வால் வெவ்வேறா
யொன்றுமா மென்றா லுன்சொன்
மதிபெரிது மிலாதார்க்கு
மாறாகித்
தோன்றாதோ வானோர் கோவே.
(இ-ள்.)
வானோர்கோவே -
தேவர்களுக்கெல்லாம்
முதல்வனாகிய ஸ்வாமியே!, (நீ) பொருளெல்லாம்
- ஜீவாதி
திரவியங்கள், பொதுவகையால் - தத்தம் ஸாமான்னிய
குணத்தினால்,
ஒன்றேயென்று - ஒன்றாகுமென்றும், அருள்
செய்து - அருளிச்
செய்து, அப்பொதுவலாத - அந்த
ஸாமான்ய குணமல்லாத,
விதிவகையால் - விசேஷ குணத்தினால், பொருளெல்லாம் -
ஜீவாதி
பொருள்களெல்லாம், வேறேயென்று - வேறு
வேறென்றும்,
அவ்விரண்டும் - அப்படி ஸாமான்ய விசேஷ குணங்களினாலாகிய
ஒன்றும் பலவும் என்னும் தன்மைகள், ஒன்றேயென்றும்
- தத்தம்
ஸாமான்ய விசேஷாஸ்தித்துவத்தினால் ஒன்றேயென்றும்,
பொருள் -
ஜீவாதி பொருள்கள், பொது - ஸாமான்யத்தினாலும்,
விரிவு -
விசேஷத்தினாலும், நிகழ்வால் -
அஸ்தித்துவமாகி நிகழ்கின்ற
விதத்தால், வெவ்வேறாய் - விசேஷ குண
பரியாயத்தால் வேறு
வேறாகி, ஒன்றுமாம் - ஸாமான்ய
குண பரியாயத்தால் ஒன்றும்
ஆகும், என்றால் - என்று அருளிச் செய்தால், உன் சொல் -
உனது
வசனமானது, மதி பெரிது
மிலாதார்க்கு -
அற்ப
புத்தியையுடையவர்களுக்கு, மாறாகி - விரோதமாகி, தோன்றாதோ -
தோற்றாதோ, எ-று. (150)
1198. ஆதியா யாதியிலா யந்தமா
யந்தமிலா யடையா தெய்தும்
போதியாய் போதியிலாய் புறத்தாயெப்
பொருளினுக்கு மகத்தாய் மூன்று
சோதியாய் சோதியிலாய் சுருங்காதாய்
பெருகாதாய் தோன்றா மாயா
நீதியாய் நீதியிலாய் நினைப்பரியாய்
வினைப்பகையெம் மிறைவ னீயே.
|