(இ-ள்.) ஆதியாய் -
ஜீவஸ்வபாவ குணமுற்ற முதல்வனே!,
ஆதியிலாய் - திரவியார்த்திக
தன்மையினால் முதலில்லாமல்
அனாதியானவனே!, அந்தமாய் -
ஸம்ஸாரத்தை
நீக்கி
மோட்சமென்னும் முடிவாய், அந்தமிலாய் -
இனி அத்தத்துவத்தின்
முடிவு ஒருபோது மில்லாதவனே!, அடையாது - இந்திரியங்களுக்கு
விஷயமாகி அடையாமல்,
எய்தும் -
ஆத்மகுண
ஸ்வபாவத்தாலடைகின்ற, போதியாய்
- அதீந்திரிய
ஞானத்தையுடையவனே!, போதியிலாய் -
இந்திரிய விஷயமாகிய
மதிசுருத அவதி முதலாகிய
கிரமகரண ஞான
பரிண
மனமில்லாதவனே!, புறத்தாய் - ஸகல பதார்த்தத்திற்கும்
நீங்கலான
ஸ்வத்திரவிய குண ஸ்வயம்புவானவனே, எப்பொருளினுக்கும் - ஸகல
பதார்த்தத்திற்கும், அகத்தாய் - உனது
குணத்தினால் ஞானாந்த
ஸ்தித யுக்தனே, மூன்று சோதியாய் - ஆத்ம குணமான
சுத்த ஞான
தர்சன சாரித்திர ஜோதி
யுக்தனே!, சோதியிலாய் -
இதர
ஜோதிகளில்லாதவனே, சுருங்காதாய் பெருகாதாய்
- சுருக்கமும்
பெருக்கமும் இல்லாத தன்மையனே!, தோன்றாமாயா
நீதியாய் -
திரவியார்த்திக நயத்தினால் ஜனனமரண
ஸ்வரூபமாகிய தன்மை
இல்லாத த்ரௌவ்ய யுக்த நிச்சய நீதிஸ்வரூபனே!,
நீதியிலாய் -
பரியாயார்த்திக நயவ்யவஹார ஸ்வரூப
வ்யதிரிக்த நீதி ரஹிதனே!,
நினைப்பரியாய் - அசிந்திய ஸ்வரூபனே!, வினை - கருமங்களுக்கு,
பகை - சத்துருவாகி ஜயித்தவனே!, எம்
இறைவன் - எங்கள்
நாயகன், நீயே - நீயேயாகின்றாய், எ-று. (151)
1199. காமருதுந் துபிகறங்கக் கடிமலர்மா
மழைபொழியக்
கவரி பொங்கத்
தேமருபூம் பிண்டியின்கீழ் மண்டலபோய்த்
திசைகுலவத்
திங்கள் வட்டந்
தாமொருமூன் றனையமணி முக்குடைக்கீழ்
மிக்கவினை
யுடையச் செல்லுஞ்
சேமமுடை நெறியருளிச் சீயவணை
யமர்ந்தனையெஞ் செல்வ னீயே.
(இ-ள்.)
காமரும் - விரும்பத்தக்க,
துந்துபி - தேவ
வாத்தியங்கள், கறங்க - சப்திக்க, கடி - வாசனை பொருந்திய, மா -
சிறந்த, மலர் மழை -
புஷ்ப வருஷங்களை, பொழிய -
சதுர்ணிகாயாமரர்கள் சொரிய, கவரி -
சாமரைகள், பொங்க -
அசைய, தேமரும் -
வாசனையைச் சேர்ந்த,
பூம் -
புஷ்பங்களையுடைய, பிண்டியின்கீழ் - அசோக
விருட்சத்தின் கீழ்,
மண்டலம் போய் - பிரபாமண்டல ஒளியானது சென்று, திசைகுலவ -
திக்குகளில் வியாபிக்க, திங்கள் வட்டந்தாமொரு
மூன்றனைய -
மூன்று ஸம்பூர்ண சந்திர மண்டலங்களை
யொன்றின்மேலொன்று
அடுக்கிட்டு வைத்ததை யொப்பாகிய,
மணி - அழகிய
ரத்தினத்தாலாகிய தண்டை
|