யுடைய, முக்குடைக்கீழ்
- தவள சத்திரத்திரயத்தின் கீழ், மிக்க -
மிகுதியாகிய, வினை - கர்மங்கள், உடைய
- கெடும்படியாக,
செல்லும் - நடக்கின்ற, சேமமுடை - க்ஷேமகரத்தையுடைய, நெறி -
ரத்னத்திரயமாகிற மோட்ச
மார்க்கத்தை,
அருளி -
திவ்யத்வனியாலுபதேசித்து, சீயவணை -
சிம்மாசனத்தின்மேலே,
அமர்ந்தனை - பொருந்தி யிருக்கின்ற ஸ்வாமியே!, எம் - எங்கட்கு,
செல்வன் - ஸம்பத்தை யளிக்கின்ற
நாதனானவன், நீயே -
நீயேயாகின்றாய், (என்றும் துதித்தார்கள்), எ-று. (152)
வேறு.
1200. இனையன துதியினோ டிறைஞ்சு மெல்லையின்
வினைகளின் வயறுகள் வெந்த மைந்தர்கண்
முனிமையின் வடிவினை முடிய நின்றுதம்
வினைகளை முதலற வெறிய வெண்ணினார்.
(இ-ள்.)
இனையன - இத்தன்மையனவாகிய, துதியினோடு -
ஸ்தோத்திரங்களோடு, இறைஞ்சும் - ஜினேந்திரனை வணங்குகின்ற,
எல்லையில் - காலத்தில்,
வினைகளின் வயறுகள் - கர்மக்
கூட்டங்களின் இருக்கைகளானவை, வெந்த
- வேக்காடுற்றன,
(அதாவது : ஸ்திதிகாண்ட
காதகங்களாகக் குறைவுபட்டன),
மைந்தர்கள் - அப்படிப்பட்ட ஸம்மியக்துவ
குணோத் கிருஷ்ட
பரிணாமமுடைய இம்மேருமந்தரரென்கிற இருவர்களும்,
முனிமையின்
வடிவினை - முனிவரர் ரூபமாகிய நிர்க்கந்த தீக்ஷையை,
முடிய -
அடையும்படியாக, நின்று - அச்சமவசரணத்தில்
நின்று, தம் -
தங்களுடைய, வினைகளை - கர்மங்களை,
முதலற - முழுமையும்
நீங்கும்படி, எறிய - கெடுப்பதற்கு, எண்ணினார்
- நினைத்தார்கள், எ-று.
(153) 1201. ஏத்தருங் குணத்தவத் திறைவ
யாமுடைக்
கோத்திரங் குலமிவை யருளு
வாழிநீ
நீத்தரும் பிறவிநீர்க் கடலை
நீந்துநற்
றேப்பையாந் திருவுரு வென்றி
றைஞ்சிடா. (இ-ள்.) (அப்படி நினைத்தவர்கள்), ஏத்தரும் - ஸ்துதித்தற்கரிய,
குணத்து - அனந்த ஞானாதி குணங்களையுடைய,
தவத்து -
தபஸையுடைய, (கணதராதி ரிஷியராதியர்களுக்கு),
இறைவ -
நாதனாகிய ஸ்வாமியே!, யாமுடை - எங்களுடைய,
கோத்திரம் -
கோத்திரமும், குலம் - குலமும், இவை - இத்தன்மையாக
உச்சைர்
கோத்திரமும் அரசர் குலமுமாகும்,
(ஆகையால்), நீத்தரும் -
கடத்தற்கரிய, பிறவி நீர்க்கடலை
- ஸம்ஸாரமாகிற ஜல
ஸமுத்திரத்தை, நீந்தும் - கடக்கும்படியான, நல் -
நன்மையாகிய,
தேப்பையாம் - தெப்பமாகிற, திருவுருவு -
|