சமவசரணச்சருக்கம்567


Meru Mandirapuranam
 

 1204. மற்புயத் தார்மயிர் வாங்கி நின்றவர்
      கற்பக மிலைமலர் கழன்ற தொத்தனர்
      மற்றுவா னவரந்த மயிரை மாலையாற்
     சுற்றிவான் கடலிடைத் தொழுதிட் டார்களே.

   (இ-ள்.)   மயிர்  -   தலை  மோவாய்  மீசை  கன்னம் ஆகிய
இவைகளின் மயிர்களை,  வாங்கி  -  தீக்ஷா  விதிப்படி   பரிகரித்து,
நின்றவர் - நின்றவர்களாகிய, மற்புயத்தார் - மல்லயுத்தஞ் செய்வதில்
சிறந்த தோள்களையுடைய இந்த  மேருமந்தரரென்கிற  இருவர்களும்,
கற்பகம் -  கற்பக  மரமானது, இலை -   இலைகளையும்,   மலர் -
புஷ்பங்களையும்,    கழன்ற   தொத்தனர்   -   உதிர்த்திருந்ததற்கு
ஒப்பானார்கள், மற்றும் பிறகு, வானவர் - தேவர்கள், அந்த மயிரை -
அந்த  ரோமங்களை,   மாலையால்  -   பூமாலைகளால்,   சுற்றி -
சூழச்சுற்றி, தொழுது - வணங்கி, வான் - வெளுப்பாகிய, கடலிடை -
க்ஷீர    ஸமுத்திரத்திலே,    இட்டார்கள்  -   கொண்டு   போய்ப்
போட்டுவிட்டார்கள், எ-று. (157)

1205. சீலமும் வதங்களுஞ் செறிந்த வெல்லையின்
     மாலையுஞ் சாந்தமு மேந்தி வானவர்
     கோலமா தவர்குணம் புகழ்ந்தி றைஞ்சினா
     ரேலவந் திருத்தியே ழடைந்த வென்பவே.

    (இ-ள்.)   சீலமும்  -   சீலாச்சாரங்களையும்,    வதங்களும் -
பஞ்சமஹா விரதங்களையும்,  செறிந்த  - (இவ்விருவர்களும்) சேர்ந்த,
எல்லையில்  -  காலத்திலே,  வானவர் -  தேவர்கள்,  மாலையும் -
பூமாலைகளையும்,  சாந்தமும் - சந்தனங்களையும், ஏந்தி - கொண்டு
அர்ச்சித்து, கோலம் - அழகாகிய,  மாதவர்  - மஹா தபஸையுடைய
இவ்விருவர்களுடைய,   குணம்    -  ஸம்மியக்ஞானாதி  குணத்தை,
புகழ்ந்து - புகழ்ச்சி செய்து,  இறைஞ்சினார் - வணங்கினார்கள், ஏல
வந்து  -   இவர்கள்    குணோத்  கிருஷ்டத்திற்கு  இசைய  வந்து,
இருத்தியேழ் - ஸப்தரித்திகளும், அடைந்த - சேர்ந்தன, எ-று.

                     என்ப - அசை. (158)

1206. போதியா றைந்துமா மருந்து மாதவ
     நீதியா னாற்சுவை வலிகண் மூன்றிரண்
     டோதினார் குறைபடா வுறையு ளூணிவை
     யாதியாம் மாதவ ரிருத்தி வண்ணமே.

   (இ-ள்.) ஓதினார் - இங்குச் சொல்லப்பட்டவர்களாகிய, மாதவர் -
மஹாதபஸையுடையவர்களுடைய,  இருத்தி - ரித்தியினது, வண்ணம் -
விதமானது,