வைசயந்தன் முத்திச்சருக்கம் 57


Meru Mandirapuranam
 

மத்தை,  ஒருவி  -  விட்டு,  (ஒருவன்)  மன்னனாய் -  இராஜாவாகி,
உருகெழு  -  ரூபம்  விளங்குகின்ற,  முடி  - கிரீடத்தை, கவித்து -
தரித்து,   உலகம்  -   இப்பூமியை,  ஆள்வது  -   ஆட்சிசெய்வது,
பெருவிலை   -   பெரிதாகிய   விலையையுடைய,   மணியினை   -
இரத்தினத்தை, பிண்டிக்கு - பிண்ணாக்குக்கு, ஈவதே - கொடுத்ததற்கு
அல்லது     மாறியதற்குச்     சமானமாகும்.    ஈவதே   என்பதில்
ஏகாரந்தேற்றப்பொருளது. (118)

 119. ஆதலா லருளிய துறுதி யன்றெனப்
     போதுலா முடியினான் புகழ்ந்து பூமிக்கு
     நாதனாய்ச் சயந்தனை நாட்ட வுற்றனன்
     றாதுலா மலங்கலான் றானு நேர்ந்திலன்.

    (இ-ள்.)     ஆதலால்   -    ஆகையால்,    அருளியது   -
தாங்களென்னைப்  பூமியாளும்படி   கூறியருளியது,  உறுதியன்று  -
எனக்குறுதியானதில்லை,  என  -  என்று மறுத்துச்சொல்ல, போது -
புஷ்பங்கள்,  உலாம்  -  வியாபித்திராநின்ற,  முடியினான் - முடியை
உடைய  வைஜயந்த  மகாராஜன்,  புகழ்ந்து - (அந்த மூத்தகுமாரனது
தெளிவுக்கு)  அவனைப்புகழ்ந்து,  பூமிக்கு - இப்பூமிக்கு, நாதனாய் -
இராஜாவாக, சயந்தனை - (இளையகுமாரனாகிய) சயந்தனை, நாட்ட -
ஸ்தாபிக்க,  உற்றனன்  -  உத்தேசித்தான்,தாதுலாம் - பூந்தாதுக்கள்
வியாபித்திராநின்ற,அலங்கலான் தானும் - மாலையை யணிந்தவனாகிய
அச்சயந்த குமாரனும், நேர்த்திலன் - அதற்கிசைந்திலனாகி, எ-று.

         இதுவும் அடுத்த செய்யுளும் குளகம். (119)

                   வேறு.

  120. அறிவினாற் சிறிய நீரா ரான்றவர் தாங்கள் சென்ற       நெறியினைப் பிழைக்கப் போகின் மாற்றிடைச் சுழல்வர் நீடு
      மறுவிலாக் குணத்தி னீர்கள் மாற்றிய வரசு மேவின்
      நெறியினாற் கதிக ணான்கி னின்றுயான் சுழல்வ னென்றான்.

   (இ-ள்.) அறிவினால் - புத்தியினால்,  சிறிய - அற்பமாகிய, நீரார்
-   குணத்தையுடையவர்கள்,   ஆன்றவர்   தாங்கள்   சென்ற   -
பெரியோர்களால்   செல்லப்பட்ட,  நெறியினை  -  ஸன்மார்க்கத்தை,
பிழைக்க  -  தங்கள் மனம்  தவறிச்செல்ல, போகில் - வேறுவழியிற்
சென்றால்,  நீடு  -  நீடித்தகாலம், மாற்றிடை - (பெரியோர் நெறிக்கு
மாற்றமாகிய)   ஸம்ஸாரத்தில்,   சுழல்வர்   -  சிக்கிச்சுழலுவார்கள்,
(ஆதலால்)    மறுவிலா   -   குற்றமில்லாத,   குணத்தினீர்கள்   -
குணங்களையுடைய  நீங்கள்,  மாற்றிய - (குணமல்லவென்று) நீக்கிய,
அரசு -  இராஜ்யத்தை,  மேவின் -  பொருந்தினால்,  நெறியினால் -
கிரமத்தால்,  கதிகணான்கில் - சதுர்கதிகளில், யான் - நான், நின்று -
நிலைபெற்று, சுழல்வன் - சுழலுவேன்,  என்றான் -  என்று  சொல்லி
மறுத்துவிட்டான், எ-று.                                  (120)