572மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

றெய்தச்   சென்றிடை  -   ஏழுகயிறுயர்ந்த     மத்திமலோகத்தில்,
விழுந்தவாறு  -  பூர்வாபர  பாகத்தில்  ஒரு  பக்கத்துக்கு மூன்றாக
இரண்டு பக்கத்துக்கும்  அந்த  ஆறு  கயிறு  குறைந்து, ஒழிந்தது -
மீந்து  நின்றது,   மேன்முகம் -  மேலளவானது,  ஒன்றாகும் - ஒரு
கயிறாகும், எ-று. (168)

 1216. அரைமுழ மேழுசென் றங்கு நான்முழம்
     பெருகவிவ் வாற்றினாற் பெருகிச் சென்றுமே
     லரையெழு கயிற்றினைங் கயிற கன்றுமேற்
     பெருகிய படியினாற் பின்சு ருங்குமே.

   (இ-ள்.)   அரைமுழமேழு சென்றங்கு - மூன்றரை முழம் சென்ற
அவ்விடத்தில்,  நான்  முழம்  பெருக  -  நாலு   முழம்  விரிவாக,
இவ்வாற்றினால் - இந்தக்  கிரமத்தினால்,  பெருகிச்  சென்று  - ஒரு
கயிறகன்ற மத்திம லோகத்தினின்றும்  பூர்வாபரபாக  மிரண்டிடத்தும்
கிரமத்தால்  விரிவாகிச்  சென்று,  மேல்  -   மேலே,   அரையெழு
கயிற்றின்  -   மூன்றரைக்   கயிறுயர்ந்த  பிரம்ம  கல்பாந்தியத்தில்,
ஐங்கயிறகன்று - ஐந்து கயிறகலமாகி, பெருகியபடியினால் - பெருகிய
கிரமம்போல,  பின்  -  பிற்பாடு,   மேல்  -  மேலே,    சுருங்கும் -
சுருக்கமாகும், எ-று. (169)

 1217. பொதுவினா லொன்றுமாம் நாளி பாயிரம்
     விதியினா லுலகிரண் டாக வேண்டினார்
     முதனடு விறுதியான் மூன்று மாகினாற்
     கதியினா னிலத்தினான் காகு மென்பவே.

     (இ-ள்.)    முழம்    -   முழத்தினாலாவது,   பொதுவினால்
-  ஸாமான்யத்தினால்,    உலகு  -   லோகமானது,   ஒன்றுமாம் -
ஒன்றேயாகும்,   நாளி   -   த்ரஸ   நாளிகையென்றும்,  பாயிரம் -
பாஹ்யமென்றும்,  விதியினால்  -  இந்த  விதியினாலே,  இரண்டாக
வேண்டினார்  -  இரண்டாகவும்  விரும்பிச் சொன்னார்கள், முதல் -
அதோலோகமும்,     நடு   -    மத்திமலோகமும்,   இறுதியால் -
ஊர்த்துவலோகமுமாகிய இம்மூன்றினால்,  மூன்றுமாகி - மூன்றாகியும்,
நாற்கதியினான்    - (நாரகதிரியக்      மனுஷ்ய    தேவரென்னும்)
சதுர்கதிகளினால்,   நிலத்தின்  -  பூமிவகையின், நான்காகுமென்ப -
நாலாகுமெனவும் சொன்னார்கள், எ-று. (170)

 1218. அஞ்சுமாம் பஞ்சத்தி காயத் தாறுமா
     மெஞ்சிய காலத்தோ டேழு நாரகர்
     நஞ்சுதா ரிகணர ரொளியர் மேலவ
     ரஞ்சொலா ரிலாதவ ரகதி யார்க்கிடம்.

   (இ-ள்.) பஞ்சத்தி   காயத்து   -    பஞ்சாஸ்திகாயங்களினாலே,
அஞ்சுமாம்   -     லோகமானது     ஐந்துமாகும்,   எஞ்சிய    -
பஞ்சாஸ்திகாயத்தோடு கூடி மிஞ்சிய,