சமவசரணச்சருக்கம்573


Meru Mandirapuranam
 

காலத்தோடு - காலத்திரவியத்தோடு, ஆறுமாம் - ஆறுமாகும், நாரகர்
- நரகர் வசிக்கும்  நரகலோகமும், நஞ்சுதாரிகள் - பவணர் வசிக்கும்
பவணலோகமும்,   நரர்    -   மனுஷ்ய    லோகமும்,    ஒளியர்.
ஜோதிஷ்கருலகமும்,  மேலவர்  -  கல்பலோகமும், அம் - அழகிய,
சொலார் -  சொல்லையுடைய  ஸ்த்ரீமார்கள்,  இலாதவர்  - இல்லாத
அஹமிந்திரர் தங்கியிருக்கும்  அஹமிந்திரலோகமும், அகதியார்க்கு -
மோக்ஷகதியையுடைய    ஸித்த     பரமேஷ்டிகளுக்கு,    இடம் -
ஸ்தானமாகிய    ஸித்திக்ஷேத்திரமும்,  (ஆகிய இவைகளால்), ஏழு -
ஏழும் ஆகும், எ-று. (171)

 1219. நிகோதமே னிரையங்க ளஞ்சு தன்னிடைப்
     பகாதள வகலமோர் கயிற்ற வாகுமே
     மிகாதொரு கயிறுதான் மேரு வெய்திடா
     பகாநர கிரண்டுமேற் பவணம் பத்துமாம்.

   (இ-ள்.)   நிகோதம் -  (கிழக்கு மேற்கு ஏழுகயிறகலமும் தெற்கு
வடக்கு ஏழுகயிறு  விஸ்தீர்ணமுமாகிய  லோகத்தின் அடியிலே நாலு
திக்குகளிலும்  மூன்று  மூன்று  கயிறு  விஸ்தீர்ணம்  பாஹ்யமாகவும்
நடுவில் ஒரு கயிறகல நீளமுமாகிய த்ரஸ நாளிகையின் அடியினின்று)
நிகோதமும், மேல் - அதற்குமேல், நிரயங்களஞ்சு தன்னிடை - ஐந்து
நரக பரியந்தம், அகலம் - அகலம்,  பகாதளவு  -  முன் சொல்லாத
அளவு,  (அதாவது :  நீளம்  உன்னதம்),    ஓர்    கயிற்றவாகும் -
ஒவ்வொன்று ஒவ்வொரு கயிறு அகலம் நீளம் உன்னதமுடையதாகும்,
மிகாது - (லோகமத்திமம்வரையில்)  மீந்து நின்றது, ஒரு கயிறுதான் -
ஒரு கயிறுன்னதப்  பிரமாணமேயாம்,  மேருவெய்திடா -  மஹாமேரு
பர்வத   மூலம்வரையில்   அடைந்து,   பகா  -  முன்  சொல்லாத,
நரகிரண்டும்  -  இரண்டு  நரகங்களும்,  மேல்  -  அதற்கு  மேல்
இராநின்ற, பவணம்பத்தும் -  பத்துவிதமாகிய பவணலோகமும், ஆம்
- அந்த ஒரு கயிறுப் பிரமாணத்திலாகும், எ-று. (172)

 1220. ஒன்றரை யொன்றரை யரையொ டாறுமாய்
     நின்றவொண் டுறக்கமோர் கயிறு நின்றவா
     மன்றியேழ் நிலப்புரை நாற்பத் தொன்பதிற்
     சென்றவிந் திரகத்தெண் டிசையுஞ் சேணியே.

     (இ-ள்.)   ஒன்றரை -  பூமிக்குமேல் ஒன்றரைக் கயிறுன்னதம்,
(ஸௌதர்ம ஈசான கல்பமும்),  ஒன்றரை -  அதன்  மேலொன்றரைக்
கயிறுன்னதம், (ஸநத்குமார   மாஹேந்திர கல்பமும்),  அரையொடு -
அதற்கு மேல் அரையரைக் கயிறுன்னதத்தோடு கூடியதாகி, ஆறுமாய்
- மற்ற ஆறுயுகளங்களுமாகி, நின்ற -  அதற்கு மேல் மீந்திரா நின்ற,
ஓர் கயிறு - ஒரு கயிறுன்னதத்தில், ஒண் - ஒளிபொருந்திய, துறக்கம்
- அஹமிந்திரலோகமும், (ஸித்திக்ஷேத்திர பரியந்தம்), நின்றவாம் -