நிலை பெற்றுள்ளனவாம்,
அன்றி - இது வல்லாமல், (அதோ
லோகத்திலுள்ள), ஏழ் நிலம் - ஏழு
நரகங்களுடைய, புரை
நாற்பத்தொன்பதில் - நாற்பத்தொன்பது புரைகளிலும், இந்திரகத்து -
நடுவில் உள்ள இந்திரகங்களின்,
எண்டிசையும் - எட்டுத்
திக்குகளிலும், சேணி - பேஸ்ரீணிபந்தங்கள்,
சென்ற - வரிசையாக
அடைந்திரா நின்றன, எ-று.
இவ்வாறு கூறியதனால் பிரகீர்ணகங்கள் வரிசையில்லாமலிருக்கின்றன
வென்பது பெறப்படும். (173)
வேறு.
1221. ஆறெட்டாம் விதிக்கி லொன்றொன்
றாங்கவை திக்கி லாமே
லூறிட்ட சேணி பந்தம் புரைதொறொன்
றொழித்தொன் றாங்கீழ்
நூறிட்டா யிரங்க ளேச மையாறை யைந்து மூவைந்
தேறிட்டீ ரைந்து மூன்றொன் றைந்திலா வைந்து கீழாம்.
(இ-ள்.)
விதிக்கில் - முதல்
நரகத்து முதற்புரையில்
விதிக்குகளிலே, ஆறெட்டு - நாற்பத்தெட்டு பேஸ்ரீணிபந்தங்கள்,
ஆம்
- ஆகும், ஒன்றொன்று - ஒவ்வொன்றிதிகமாக, ஆங்கவை -
அங்கு
அந்த முதல் நரகத்து
முதற் புரையில் நாற்பத்தொன்பது
பேஸ்ரீணிபந்தங்கள், திக்கில் - திக்குகளிலே, ஆம் - ஆகும்,
ஊறிட்ட
- இப்படியாகச் சொல்லப்பட்ட, சேணிபந்தம் -
பேஸ்ரீணிபந்தங்கள்,
புரைதொறும் - கீழ் கீழ்ப்புரைகள்
தோறும, ஒன்றொழித்து -
திக்குவிதிக்குகளில் ஒன்றொன்றாகக் குறைக்க, கீழ் - ஏழா நரகத்தில்,
ஒன்றாம் - திக்குகளில் ஒரே
ஆவாஸமாகும், நூறிட்டு -
நூறிலேயிட்டு, ஆயிரங்கள் - ஆயிரங்களை,
ஏச - இசைக்க,
(அதாவது : கணிக்க), ஐயாறு - முப்பது நூறாயிரம்,
(அதாவது :
முப்பதுலக்ஷம்) (ஆவாஸங்கள் முதல்
நரகத்திலும்), ஐயைந்து -
இருபத்தைந்து லக்ஷம் (ஆவாஸங்கள் இரண்டாவது
நரகத்திலும்),
மூவைந்து - பதினைந்து லக்ஷம்,
(ஆவாஸங்கள் மூன்றாவது
நரகத்திலும்), ஏறிட்ட - இசைந்தொன்றிய,
ஈரைந்து - பத்து லக்ஷம்
ஆவாஸங்கள், (நாலாநரகத்திலும்), மூன்று
- மூன்று லக்ஷம்
ஆவாஸங்கள், (ஐந்தாநரகத்தினும்), ஐந்திலா - ஐந்து குறைந்த,
ஒன்று
- ஒரு லக்ஷம் ஆவாஸங்கள் (ஆறா நரகத்திலும்),
கீழ் - ஏழா
நரகத்தில், ஐந்து - ஐந்தே ஆவாஸங்கள், ஆம் - ஆகும், எ-று.(174)
வேறு.
1222. அசுரர் நாகரம் பொன்னர் தீவரெண்
டிசையர் தீயவ ருதகர் வாயுவர்
விசையின் மின்னவர் மேக
ராகுமத்
தசநி காயமாம் பவணர் தாங்களே.
|