சமவசரணச்சருக்கம்575


Meru Mandirapuranam
 

   (இ-ள்.)  பவணர்தாங்கள்  -  பவணதேவ கூட்டங்கள், அசுரர் -
அசுரகுமாரர்களும்,  நாகர்  -  நாக  குமாரர்களும், அம் - அழகிய,
பொன்னர் - ஸ்வர்ண குமாரர்களும்,  தீவர் - தீபகுமாரர்களும், எண்
திசையவர்  -  திக்குகுமாரர்களும்,  தீயவர்  -  அக்னிகுமாரர்களும்,
உதகர் - உததிகுமாரர்களும், வாயுவர் - வாதகுமாரர்களும், விசையின்
மின்னவர் - வித்யுத்  குமாரர்களும்,  மேகர்  -  மேக குமாரர்களும்,
ஆகும் - ஆகிய,  அ - அந்த, தசம்  - பத்துவிதமாகிய, நிகாயமாம்
- ஸமூஹங்களாகும், எ-று. (175)

வேறு.

 1223. அறுபத்து நான்கு நான்கோ டெண்பத்தேழ் பத்தி ரண்டும்
     செறிவுற்ற தொண்ணூற் றாறுஞ் செப்பிய வெழுபத் தாறும்
     மறுவற்ற வசுரர் நாகர் பொன்னர்வா யுக்கள் மற்றை
     யறுவர்க்கும் வேறு நூறா யிரம்பவ ணங்க ளாமே.

   (இ-ள்.)   மறுவற்ற   -    களங்கமற்ற,    அசுரர்  -   அசுர
குமாரர்களுக்கு,  அறுபத்து   நான்கு  நூறாயிரம்    பவணங்கள் -
அறுபத்து நாலு லட்சம்  விமானங்களும், நாகர் - நாககுமாரர்களுக்கு,
நான்கோடெண்பத்து  நூறாயிரம்  பவணங்கள்  -  எண்பத்து  நாலு
லக்ஷம்  விமானங்களும்,   பொன்னர் -  ஸ்வர்ண   குமாரர்களுக்கு,
ஏழ்பத்திரண்டு நூறாயிரம்  பவணங்களும்  -  எழுபத்திரண்டு லக்ஷம்
விமானங்களும்,  வாயுக்கள்  -   வாதகுமாரர்களுக்கு,   செறிவுற்ற -
சேர்ந்திரா  நின்ற,  தொண்ணூற்றாறு   நூறாயிரம் பவணங்களும் -
தொண்ணூற்றாறு லக்ஷம்  விமானங்களும்,  மற்றை - இவர்களல்லாத,
அறுவர்க்கும் -  ஆறுதரத்தார்களுக்கும்,  வேறு  -   வேறு வேறாக,
செப்பிய  -  சொல்லப்பட்ட, எழுபத்தாறு நூறாயிரம் பவணங்களும் -
எழுபத்தாறு  எழுபத்தாறு  லக்ஷம்  விமானங்களும், ஆம் - ஆகும்,
எ-று.

    நூறாயிரம்     பவணங்கள்   என்னும்   பதங்கள்    எல்லாத்
தொகைகளோடுங் கூட்டப்பட்டன. (176)

வேறு.

 1224. பவணர்தம் பவணங்கள் கோடி யேழொடு
     சிவணிய வெழுபதோ டிரண்டு லக்கமாம்
     அவணுறை யசுரருக் காயு வான்கட
     லுவமையி றனுதனு வையைந் தோங்கினார்.

    (இ-ள்.)   பவணர்தம் - பவண தேவர்களுடைய, பவணங்கள் -
விமான சங்கியைகள்,  கோடியேழொடு  -  ஏழுகோடியோடு   கூட,
சிவணிய   -   சேர்க்கப்பட்ட,   எழுபதோடிரண்டு    லக்கமாம் -
எழுபத்திரண்டு லட்சமாம்  (அதாவது : ஏழுகோடியே எழுபத்திரண்டு
லட்சம் விமானங்களாகும்), அவண் - அந்தப் பத்துதரங்