சிகரங்களினால், அம் - அழகிய, நல் - நன்மையாகிய, உருக்கியும் -
ருக்மிபர்வதமும், சிகரியாம் - சிகரிபர்வதமுமாகிய, மலைதமை -
இந்த
ஆறு குலகிரி பர்வதங்களை, நடுவுடைய - நடுவில் உடைத்தாகிய,
ஏழ்நாடு - பரதாதி ஏழுநாடுகளாகும்,
இவற்றினுள் - இந்த
ஏழுநாடுகளுக்குள், பரதம் - தெற்கிலுள்ள பரதக்ஷேத்திரமும்,
ரேவதம்
- வடக்கிலுள்ள ஐராவத க்ஷேத்திரமும், சமைய
மாறுடையவாம் -
ஆறு காலங்களையுடையனவாம், எ-று. (182)
1230. நன்மையு நன்மையு நன்மை யாயதும்
நன்மையிற் றீமையுந் தீமை
நன்மையுந்
திண்ணிய தீமையுந் தீமை
தீமையென்
றெண்ணிய காலமேற் றிழிவை யாக்குமே.
(இ-ள்.)
சொல்லிய -
சொல்லப்பட்ட,
நன்மையு
நன்மையும் - நன்னற்காலமும், நன்மையாயதும் -
நற்காலமும்,
நன்மையிற்றீமையும் - நற்றீக்காலமும்,
தீமைநன்மையும் -
தீநற்காலமும், திண்ணிய - திண்மை
பொருந்திய, தீமையு -
தீக்காலமும், தீமை தீமையென்று - தீத்தீக்காலமுமென்று, எண்ணிய -
எண்ணப்பட்ட, காலம் - காலங்கள், ஏற்று - உத்ஸர்ப்பிணியையும்,
இழிவு - அவஸர்ப்பிணியையும், ஆக்கும் - உண்டாக்கும், எ-று. (183)
1231. ஒருமுழம் பதினையாண் டுந்தி
யுந்திமேல்
வருசிலை யாறாயி ரம்பல்ல மூன்றெய்திப்
பெருகிய பரிசினாற் பின்சு
ருங்கிவந்
தொருமுழம் பதினையாண் டாமொர்
கற்பமாம். (இ-ள்.)
(உத்ஸர்ப்பிணி காலமானது), ஒரு முழம் -
ஒரு முழ
உன்னதத்தினின்றும், பதினையாண்டு
- பதினைந்து வருஷ
ஆயுஷ்யத்தினின்றும், உந்தி உந்தி -
பெருகிப் பெருகி, மேல் -
மேலே, வரு - வரப்பட்ட, சிலை -
வில்லுகள், ஆறாயிரம் -
ஆறாயிரம் உன்னதமும், பல்லமூன்று - மூன்றுபல்ல ஆயுஷ்யமும்,
எய்தி - அடைந்து, (அவசர்ப்பிணி காலமானது), பெருகிய பரிசினால்
- பெருகிய கிரமத்தினால், பின் - பிறகு, சுருங்கி வந்து -
குறைந்து
வந்த, ஒரு முழம் - ஒரு முழ உன்னதமும்,
பதினையாண்டு -
பதினைந்து வருஷ ஆயுஷ்யமும், ஆம் - ஆகும், ஓர்
கற்பமாம் -
(இந்த உத்ஸர்ப்பிணி அவஸர்ப்பிணி யிரண்டும்
சேர்ந்து) ஒரு
கல்பமாகும், எ-று. (184)
1232. ஆழி கள்கோடா கோடியை யிரண்டினில்
நாலுமூன் றிரண்டொன்றா நாலுகா
லங்களீற்
றாழியி லாண்டுநாற் பத்தீ
ராயிரம்
மேலவை யிரண்டிற்கும் விதிக்கப்
பட்டவே.
|