(இ-ள்.) ஆழிகள்
கோடா கோடி யையிரண்டினில் -
(அவஸர்ப்பிணிக்கேற்பட்ட) பத்துக்
கோடா கோடி கடற்கால
காலத்தில், நாலு - (நன்னற்காலத்துக்கு) நாலு கோடா கோடி கடலும்,
மூன்று - (நற்காலத்துக்கு) மூன்று கோடா கோடி கடலும்,
இரண்டு -
(நற்றீக் காலத்துக்கு) இரண்டு கோடா கோடி
கடலும், ஒன்று - (தீ
நற்காலத்துக்கு) ஒரு கோடா கோடி கடலும்,
நாலு காலங்கள் -
இப்படி நாலு காலங்களிலே, ஆம் - ஆகும், ஈற்றாழியில் - தீ
நற்காலத்தின் கடைசீக் கடற்காலத்தில்,
ஆண்டு நாற்பத்தீராயிரம் -
நாற்பத்தீராயிரம் வருஷங்கள்,
மேலவையிரண்டிற்கும் - முன்
சொல்லாத தீக்காலம் தீத்தீக்காலமாகிய இரண்டிற்கும்,
விதிக்கப்பட்ட
- இருபத்தோராயிரம்
இருபத்தோராயிரம்
வருஷங்களாக சொல்லப்பட்டனவாம், எ-று. (185)
1233. கருமமும் போகமு மிருமை யுமுடன்
மரியமுன் னிலங்களுட் பரத ரேவத
மிருமைய முதல்முக் காலம் போகத்தின்
மருவிய கருமத்தை மற்றை மூன்றுமே.
(இ-ள்.)
முன்னிலங்களுள் - முன்னாலே
சொல்லப்பட்ட
அந்த ஏழு நாடுகளினுள்ளே, பரதம் - பரத க்ஷேத்திரமும்,
ரேவதம்
- ஐராவத க்ஷேத்திரமும், கருமம் - கரும பூமியாகவும்,
போகமும் -
போக பூமியாகவும், இருமையும் - இந்த இரண்டையும், உடன் -
ஒரு
தன்மையாக, மரிய - சேர்ந்திராநின்றன, இருமைய - இந்த இரண்டில்,
முதல் முக்காலம் - முதலிலே
சொல்லப்பட்ட (நன்னற்காலம்
நற்காலம் நற்றீக்காலமாகிய இந்த) மூன்று
காலங்களும், போகத்தின்
மருவிய - போக பூமியைச் சேர்ந்திராநின்றன,
மற்றை மூன்றும் -
(தீநற்காலம் தீக்காலம் தீத்தீக்காலமாகிய
இந்த) மூன்று காலங்களும்,
கருமத்தை மருவிய - கரும பூமியைச் சேர்ந்திராநின்றன, எ-று.
‘மருவிய? என்பது இரண்டிடங்களினுங் கூட்டப்பட்டது. (186)
1234. நன்மையுட் டீமையுட் டீமை நன்மையுட்
பன்னரும் பிரமரும் பரம தீர்த்தரும்
மன்னரும் பலவரும் வாசு தேவருந்
தன்னுரு பகைவருஞ் சரமர் தாமுமாம். (இ-ள்.)
நன்மையுட்டீமையுள் -
அவஸர்ப்பிணியின்
மூன்றாங்காலமாகிய நற்றீக்காலத்தினுடைய அந்தியத்திலேயும், தீமை
நன்மையுள் - நாலாங்காலமாகிய தீ நற்காலத்திலும்,
பன்னரும் -
சொல்வதற்கரிய, பிரமரும்
- பிரம்மாக்களும்,
பரம -
உத்கிருஷ்டமாகிய குணமுடைய, தீர்த்தரும்
- தீர்த்தங்கர பரம
தேவர்களும், மன்னரும் - சக்ரவர்த்திகளும்,
பலவரும் -
பலதேவர்களும், வாசுதேவரும் - வாஸு
|