வைஜயந்தன், தன் பௌத்திரனாகிய
வைஜயந்தனுக்கு
முடிசூட்டித் தன்புத்திரருடன் துறவெய்தல்.
121. வானத்தின் றுள்ளி யல்லால் வருந்தினும் விரும்பல் செல்லா
மானத்தை யுடைய புள்ளின் மைந்தர்கள்
மறுத்து நிற்பக்
கானப்போ ரேற்றின் பாரங் கன்றின்மே
லிட்ட தேபோற்
றேனொத்த முடியை மன்னன் சிறுவன்றன்
சிறுவற் கீந்தான்.
(இ-ள்.) வானத்தின் -
ஆகாயத்தினின்றும் பெய்கிற,
துள்ளியல்லால் - மழைத்துளியையல்லாமல்,
வருந்தினும் -
தாகத்தினால் வருந்தினும், விரும்பல் செல்லா - (பூமியில்
இருக்கும்
ஜலத்தை) இச்சியாத, மானத்தையுடைய -
அபிமானத்தையுடைய,
புள்ளின் - வானம்பாடியென்கிற பக்ஷியைப்போல,
மைந்தர்கள் -
(சஞ்சயந்த, சயந்தரென்னும்) குமாரரிருவரும், மறுத்துநிற்ப -
இராஜ்யம்
வேண்டாமென்று தடைசெய்ய, கானம் - காட்டில் சஞ்சரிக்கும்,
போர்
- யுத்தத்தைச் செய்யும்படியான, ஏற்றின்பாரம் -
விருஷபத்தின்பேரில்
இடும்படியான சுமையை, கன்றின்மேல் - ஒரு
கன்றின்மீது,
இட்டதேபோல் - வைத்தது போல, தேனொத்த -
இனிமைபொருந்திய,
முடியை - கிரீடத்தை, சிறுவன்றன் சிறுவற்கு
- தனது
மூத்தகுமாரனுடைய குமாரனாகிய வைஜயந்தனெனும் தனது
பேரனுக்கு,
மன்னன் - வைஜயந்தராஜன், ஈந்தான் - கொடுத்தான், எ-று.
பேரன்
- பாட்டன் பெயரையுடையவன்; பாட்டன் பெயரை,
பௌத்திரனுக்கிடுதல் தொன்று தொட்ட
வழக்கமாதலின்,
பௌத்திரனுக்குப் பேரன் என்னும் பெயர் ஏற்பட்டது.
(121)
122. மண்ணினுக் கிறைமை பூண்டான் மன்னன்வை சயந்த னென்றே
திண்முர சறைந்த பின்னைச் சிறப்பொடுஞ் சென்று
புக்கு
புண்ணியக் கிழவன் றன்னைப் புகழ்ந்தடி பணிந்து பொய்தீர்
பண்ணவர் படிமங் கொண்டார் பார்த்திபர் குழாத்தி னோடே.
(இ-ள்.) (அதன்மேல்) மண்ணினுக்கு -
இந்த பூமிக்கு, இறைமை
- இராஜ்யத்துவத்தை, வைசயந்தன் -
வைஜயந்தனென்னும்
பெயரனாகிய, மன்னன் - இராஜகுமாரன், பூண்டான் -
தரித்தான்,
என்று-, திண் - வலிமையாகிய, முரசு -
பேரிகையை,அறைந்தபின்னை
- அடித்துத் தெரிவித்த பிறகு (வைஜயந்தன்
முதலிய மூவரும்),
சிறப்பொடும் - பூஜாத்திரவியத்தோடும், சென்று -
போகி, புக்கு-
சமவஸரணமடைந்து, புண்ணியக் கிழவன்றன்னை
-புண்ணியத்திற்குரிய
ஸ்வயம்பு நாமபகவானை,புகழ்ந்து -
ஸ்தோத்திரம்பண்ணி,அடிபணிந்து
- பாதத்திலே வணங்கி, பார்த்திபர் குழாத்தினோடு
- அநேக
அரசர்களோடும், பொய்
|