தேவர்களும், தன் -
இவ்வினந்தன்னிலே, உறு - பொருந்திய,
பகைவரும் - பகைஞரும் (அதாவது : பிரதி
வாஸுதேவர்களும்),
சரமர்தாமும் - இன்னும் அனேகமாகிய சரமதேகதாரிகளும், ஆம் -
உற்பத்தியாம், எ-று. (187)
1235. உத்தர தெக்கண குரவ முத்தமம்
மத்திம மரிவரு டம்மி ரம்மிய
மத்தக மைவத மைரண்ணி யம்மிவை
நித்தமாய்ப் போகங்க ணின்ற
பூமியே.
(இ-ள்.)
உத்தரகுரவம் -
உத்தரகுரு க்ஷேத்திரமும்,
தெக்கணகுரவம் -தக்ஷிணகுரு க்ஷேத்திரமும், உத்தமம் -
உத்தமபோக
பூமியாகவும், அரிவருடம் - ஹரிவருஷ க்ஷேத்திரமும், இரம்மியம் -
ரம்மியக க்ஷேத்திரமும், மத்திமம் - மத்திமபோக பூமியாகவும்,
ஐவதம்
- ஹைமவத க்ஷேத்திரமும், ஐரண்ணியம்
- ஹைரண்ணியவத
க்ஷேத்திரமும், அத்தகம் - ஜகன்னியபோக
பூமியாகவும், இவை -
இந்த க்ஷேத்திரங்கள், நித்தமாய் - நித்தியங்களாய், போகங்கள் -
போகங்களுடனே கூடி, நின்ற - நிலைபெற்றிராநின்ற, பூமி - போக
பூமிகளாகும், எ-று.
1236. மூன்றிரண் டொருபல்ல முறையு ளாயுக
மான்றவில் லாயிர மாறு நாலிரண்
டூன்றிய வோக்கமூன் றிரண்டோர்
நாள்விடா
தோன்றிய பசிகெட வமுத முண்பரே. (இ-ள்.)
மூன்று பல்லம் - (உத்தமபோக
பூமியிலிராநின்ற
மனுஷ்யர்களுக்கு) மூன்று பல்லமும், இரண்டு
- (மத்திமபோக
பூமியிலிராநின்ற மனுஷ்யர்களுக்கு) இரண்டு பல்லமும், ஒரு பல்லம் -
(ஜகன்னிய போகபூமி மனுஷ்யர்களுக்கு) ஒரு
பல்லமும், முறை -
கிரமமாக, ஆயுகம் - ஆயுஷ்யங்கள், உள - உண்டாகும், ஆன்ற -
பெரிதாகிய, வில் - விற்கள், ஆயிரமாறு -
(உத்தமபோக பூமி
மனுஷ்யர்களுக்கு) ஆறாயிரமும், நாலு
- (மத்திமபோக பூமி
மனுஷ்யர்களுக்கு) நாலாயிரமும், இரண்டு - (ஜகன்னிய
போகபூமி
மனுஷ்யர்களுக்கு) இரண்டாயிரமும், ஊன்றிய -
உண்டாகப்பட்ட,
ஓக்கம் - உன்னதங்களாகும், மூன்று நாள்
விடா - (உத்தமபோக
பூமியிலிராநின்ற மனுஷ்யர்கள்) மூன்று நாளிடைவிட்டும்,
இரண்டு -
(மத்திமபோக பூமி மனுஷ்யர்கள்) இரண்டு நாள் இடைவிட்டும், ஓர்
நாள் விடா - (ஜகன்னிய போகபூமி
மனுஷ்யர்கள்) ஒரு நாள்
இடைவிட்டும், தோன்றிய - தங்களுக்குண்டாகிய, பசி - பசியானது,
கெட - நீங்கும்படியாக, அமுதம் -
அமிர்தத்தை, உண்பர் -
பொசிப்பார்கள், எ-று. (189)
1237. உரைத்தமுக் காலமூன் றாதி யுள்ளுமாம்
நிரைத்தவைஞ் ஞூறுவிற் புவ்வ கோடியு
|