மரத்தியே ழிரண்டுநூற் றிருபத் தைம்பது
முரைத்திலா மூன்றிலா திக்கு மோக்கநாள்.
(இ-ள்.)
உரைத்த - முதலிலே சொல்லப்பட்ட, முக்காலம் -
(நன்னற்காலம், நற்காலம், நற்றீக்காலமாகிய
இந்த) மூன்று
காலங்களினுடைய, ஆதி - முதலிலேயுள்ள குணங்கள்,
மூன்றுள்ளும்
- மூன்று போகபூமியுள்ளும், ஆம் - ஆகும், (அதாவது :
மூன்று
காலங்களின் ஆதியிலுள்ள மனிதரின் உன்னதமும்,
ஆயுஷ்யமும்
உத்தமம் மத்திம ஜகன்னிய போக பூமியிலுள்ளவர்களின்
உன்னதம்
ஆயுஷ்யத்திற்கு முறையே சமானமாகும்), நிரைத்த
- வரிசைபெற்ற,
ஐந்நூறு வில் - ஐந்நூறு வில்லுன்னதமும்,
புவ்வகோடியும் -
பூர்வகோடியாயுஷ்யமும், அரத்தியேழு - ஏழு முழமும், நூற்றிருபது -
நூற்றிருபதுவருஷமும், இரண்டு - இரண்டு முழமும்,
ஐம்பதும் -
ஐம்பது வருஷமும், உரைத்திலா - முன் சொல்லாத,
மூன்றில் -
(தீநற்காலம், தீக்காலம்,
தீத்தீக்காலம் இந்த)
மூன்று
காலங்களினுடைய, ஆதிக்கும் - முதலுக்கும், (முதலிலுள்ள
மனிதர்களின்), ஓக்கம் - உன்னதமும், நாள் - ஆயுஷ்யமும், ஆம் -
ஆகும், எ-று. (190)
1238. கருமத்த கச்சைநற் சுகச்சை காமிக
மருவிய மாகச்சை கச்ச காவதி
யருமையி லாவதை யிலங்க லாவதை
பொருவிலா பொக்கலை பொக்க லாவதி.
(இ-ள்.) கருமத்த - நித்திய கர்மபூமியைச் சேர்ந்திராநின்றவை,
கச்சை - கச்சாவும், நல் - நன்மையாகிய, சுகச்சை - சுகச்சாவும்,
காமிகம் - அழகை, மருவிய - சேர்ந்திராநின்ற,
மாகச்சை -
மஹாகச்சாவும், கச்சகாவதி -
கச்சகாவதியும், அருமையில் -
(நற்குணம் பொருள்கள் முதலியவைகளால்)
அருமையில்லாத
(அதாவது : குண ஐஸ்வரியங்களால்
மிகுந்த), ஆவதை -
ஆவர்த்தாவும், இலங்கலாவதை - லாங்கலாவர்த்தாவும், பொருவிலா -
உபமையில்லாத, பொக்கலை - புஷ்கலாவும்,
பொக்கலாவதி -
புஷ்கலாவதியுமாகும், எ-று. (191) 1239.
மன்னு தென்கரை வச்சைநற் சுவச்சைமா
துன்னுமா வச்சையே வச்ச காவதி
சொன்னநல் லிரமையே சுரமை தோமிலா
மன்னர்மன் ரமணிய மங்க லாவதி. (இ-ள்.)
தென்கரை - (சீதா நதியினுடைய)
தென்கரையில்,
மன்னும் - சேர்ந்திராநின்ற, வச்சை
- வஸ்ஸாவும், நல் -
நன்மையாகிய, சுவச்சை -ஸுவஸ்ஸாவும், மா - பெருமையை,
துன்னும்
- சேர்ந்திராநின்ற, மாவச்சை - மஹாவஸ்ஸாவும்,
வச்சகாவதி -
வஸ்ஸகாவதியும், சொன்ன - சொல்லப்பட்ட, நல் - நன்
|