சமவசரணச்சருக்கம்583


Meru Mandirapuranam
  

களாலும், நாலு நாலிரட்டியாய் - நாலை நான்குதரம் இரட்டித்ததாகிய
முப்பத்திரண்டாகிய,   விதேகநாடு   -  விதேகநாடுகள்,  நின்ற  -
இராநின்றன, எ-று. (195)

 1243. சீதையின் வடகரை யாதியாய் வலம்முறை
     யோதியவந் நாடுகள் நீதியோடு நின்றவே.

   (இ-ள்.)   ஓதிய     -     சொல்லப்பட்ட,     அந்நாடுகள் -
அந்தக் கச்சா முதலாகிய  முப்பத்திரண்டு  நாடுகளும்,  சீதையின் -
ஸீதாநதியினுடைய,  வடகரை  -  வடகரையினின்றும்,   ஆதியாய் -
முதலாகி, வலம்முறை . பிரதக்ஷிணமாக,  நீதியோடு  - வரிசையோடு,
நின்ற - இராநின்றன, எ-று. (196)

 1244. சொல்லியவந் நாடுகள் வெள்ளியம் மலையினுஞ்
      சுல்லையா றிரண்டினும் நல்லகண்ட மாறுமாம்.

   (இ-ள்.)     சொல்லிய - சொல்லப்பட்ட, அந்நாடுகள் - அந்தக்
கச்சா முதலிய  முப்பத்திரண்டு நாடுகளும், வெள்ளியம்மலையினும் -
ஒவ்வொரு  விஜயார்த்த  பர்வதத்தினாலும்,  சுல்லையாறிரண்டினும் -
இரண்டு க்ஷுல்லக  நதிகளினாலும்,  நல்ல -  நன்மையாகிய, கண்டம்
ஆறுமாம் - (ஒவ்வொரு நாடுகளில்)   ஆறு  கண்டங்களாகும், எ-று. (197)

 1245. செவ்விலைந்து நூறுயர்ந்து புவ்வகோடி யாயுக
      மிவ்வகைய நாட்டுளென்றும் வெவ்வினைக டீர்ப்பரே.

    (இ-ள்.) இவ்வகைய - இந்த  பிரகாரமாகிய,   நாட்டுள் - இந்த
முப்பத்திரண்டு நாடுகளிலேயும், (இராநின்ற  மனுஷ்யர்கள்),   செவ் -
செவ்விதாகிய, வில் - வில்லுகள்,  ஐந்துநூறுயர்ந்து  -  ஐந்நூறுன்னத
முடையவர்களாகி, புவ்வகோடியா யுகம் - பூர்வகோடி ஆயுஷ்யத்தில்,
என்றும் - (காலவேறுபாடில்லாமல்)  எப்பொழுதும், வெவ்வினைகள் -
கர்மங்களை, தீர்ப்பர் - கெடுத்து முக்தியையும் அடைவார்கள், எ-று. (198)

 1246. சுல்லைமேரு நான்குடைய நல்லநாடு நான்கினு
      மில்லைவேறு பாடிவட் சொன்னசொன்ன யாவையும்.

   (இ-ள்.)  சுல்லைமேரு -  க்ஷுல்லக  மஹம்மேரு, நான்குடைய -
நாலையுடைத்தாகிய,  நல்ல  -  நன்மையாகிய,   நாடு  நான்கினும் -
(தாதகீஷண்டம்  புஷ்கரார்த்தங்களி  லிராநின்ற)   நாலு    விதேக
க்ஷேத்திரங்களிலும்,    இவண் -  இந்த  ஜம்பூத்வீபத்தில்,  சொன்ன
சொன்ன -     சொல்லப்பட்ட     சொல்லப்பட்ட,    யாவையும் -
சமஸ்தங்களும்  , இல்லை       வேறுபாடு   -  வேறுபாடில்லாமல்
சமானமாயிரா நின்றன, எ-று. (199)