1251. முடிந்ததீபம் சாகரத் தடைந்தவை விலங்குமிவ்
விடங்களெண் ணிறந்தன முடிந்திடா வுரைக்கவே.
(இ-ள்.)
முடிந்த - அந்தியத்திலிராநின்ற,
தீபம் -
ஸ்வயம்புரமணார்த்த த்வீபத்திலும், சாகரத்து
- ஸ்வம்புரமண
ஸமுத்திரத்திலும், இவ்விடங்கள் - இந்த இரண்டரை
த்வீபம் இரண்டு
ஸமுத்திரங்களிலும், அடைந்தவை - சேர்ந்திரா நின்றவைகளாகிய,
விலங்கும் - த்வீந்திரிய திரிந்திரிய
சதுரிந்திரியமாகிய விகலேந்திரிய
விலங்குகளும் பஞ்சேந்திரிய விலங்குகளும், எண்ணிறந்தன -
கணக்கு
மீறினவையாயிராநின்றன, உரைக்க
- அவை இவ்வளவென்று
கணக்கிட்டுச் சொல்வதற்கு, முடிந்திடா - முடியா, எ-று.
(204)
வேறு.
1252. ஏழு சாகரத் தீவத்தி னெட்டதாய்ச்
சூழ்கி டந்தநந் தீச்சுர தீவதி
லூழி யூழிவா னோர்வந் திறைவனைத்
தாழு மற்றதன் பெற்றியைச் சாற்றுவாம்.
(இ-ள்.)
ஏழுசாகரத்தீவத்தின் -
ஜம்பூத்வீப முதல்
ஏழுத்வீபங்களினின்றும் மஹாலவண ஸமுத்திரமும்
முதல் ஏழு
சமுத்திரங்களினின்றும், (தாண்டி), எட்டதாய் - எட்டாவது த்வீபமாகி,
சூழ்கிடந்த - ஏழு த்வீபங்களையும் ஏழு ஸமுத்திரங்களையுஞ்
சூழ்ந்து
வளையாக்கிருதமாய் இராநின்ற,
நந்தீச்சுவரத்தீவதில் -
நந்தீசுவரத்வீபத்தில், ஊழி ஊழி - அனாதி காலமாக முறைமையால்,
வானோர் - சதுர்ணிகாயாமரர்கள், வந்து -
அந்தத்வீபத்திலுள்ள
அக்கிருத்திமசைத் யாலயங்களிற்
சேர்ந்து, இறைவனை -
ஜினேந்திரப்பிரதிமைகளை, தாழும் - வணங்கி பூஜிக்கின்ற, அதன் -
அந்த நந்தீஸ்வரத்வீபத்தின், பெற்றியை - பெருமையை, சாற்றுவாம் -
இனிச் சொல்லுவோம், எ-று. (205)
வேறு.
1253. அறுபத்து மூன்றினோ டாய நூற்றினா
லெறியப்பட் டிருந்தன கோடி யோசனை
செறிவுற்ற விலக்கமெண் பத்து நான்கொடு
மறுவற்ற தீவத்துள் ளகல மாகுமே.
(இ-ள்.) அறுபத்து மூன்றினோடு - அறுபத்து மூன்றோடு,
ஆய
- கூட்டப்பட்ட, நூற்றினால்
- நூற்றினாலே (அதாவது :
நூற்றியறுபத்து
மூன்றினாலே),
எறியப்பட்டிருந்தன -
பெருக்கப்பட்டிருந்தனவாகிய, கோடி - நூற்றியறுபத்து
|